Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே இன்னிங்சில் நியூசிலாந்து வீரர்கள் 7 பேர் LBW.. ஒரு ரன் முன்னிலை பெற்றும் கதறவிட்ட ஆஸ்திரேலியா

கிறிஸ்ட்சர்ச் : முதலில் பேட்டிங் விளையாடிய நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 433.தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 432. ஒரு ரன் முன்னிலை பெற்ற நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியது.

டெஸ்ட் மேட்ச் முடிவு எதிர்பார்க்காத விதமாக அமைந்தது தான் வினோதம். அது தான் டெஸ்ட் கிரிக்கெட்டின் மகிமை. இந்த டெஸ்ட் மார்ச் 2005 ல் கிரைஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைப் பெற்றது.நியூசிலாந்து வீரர் ஹாமிஷ் மார்ஷல் 146

cricket history sports news interseting facts

ஆஸ்திரேலிய வீரர்கள் சிமன் கயிட்ச் 118,
ஆடம் கில்சிறிஸ்ட் 121
ரன்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலிய பவுலர் கிளேன் மக்ராத் 6,
நியூஜிலாந்து பவுலர் டேனியல் வெட்டோரி 5
விக்கெட்டுக்கள் எடுத்தனர்.

இரண்டாவது இன்னிங்ஸ் திருப்பு முனையாக அமைந்தது. இந்த இன்னிங்சில் அதிக பட்ச தனி வீரர் ஸ்கோர் நியூசிலாந்து அணிக்காக எடுக்கப் பட்ட ரன்கள் 24. அது மட்டும் அல்லாமல் இந்த இன்னிங்ஸ் இவ்வகை தனி வீரர்களின் ரன்களையும் கண்டது.

24, 23, 22, 21

இவற்றை தவிர இரண்டு 5 ரன்கள் மற்றும் இரண்டு 0 க்கள் வேறு இருந்தது.
முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு மேல் எடுத்த நியூஜிலாந்து அணி டெஸ்ட் மேட்சின் 3 வது இன்னிங்சில் 131 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி சுருண்டது.

ஜாசன் கில்ல்லிஸ்பி 3, ஷேன் வார்னே 5 விக்கெட்டுக்களை தங்கள் அபார பவுலிங் திறமையால் அள்ளினர்.ஆஸ்திரேலிய அணியின் ஒப்பனிங் பேட்ஸ்மன் ஜஸ்டின் லங்கர் அபாரமாக ஆடி 72* எடுத்து அவுட் ஆகாமல் வெற்றி பெற பெரிதும் உதவினார்.

அணியின் ஸ்கார் 135 / 1

இந்த டெஸ்ட் வேறு ஒரு முக்கியமான காரணத்திற்காக டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது.இந்த டெஸ்டில் எடுக்கப் பட்ட 31 விக்கெட்டுக்களில் 13 விக்கெட்டுக்கள் LBW முறையில் அவுட்.
அதிலும் நியூசிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கில்
மொத்தம் 7 அவுட்டுக்கள் LBW மூலம் என்பது சரித்திரத்தில் இடம் பெற செய்தது ஆகும்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Monday, November 4, 2024, 17:49 [IST]
Other articles published on Nov 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+