உலக கோப்பையில் 2வது சதம் அடித்த பின்ச்..! 100 ரன்களை எட்டிய அடுத்த பந்தில் அவுட்
லார்ட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் ஆஸி. கேப்டன் பின்ச் அதிரடியாக சதமடித்து, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.
கிரிக்கெட் உலகம் பெரிதும், எதிர்பார்த்த போட்டி. லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தும், ஆஸி.யும் மோதின. முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பின்ச் 15வது ஒருநாள் சதத்தையும், நடப்பு உலக கோப்பையில் 2வது சதத்தையும் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவர் 116 பந்துகளில் இந்த ரன்களை எட்டினார். அதில் 11 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும். 100 ரன்கள் எடுத்த போது, 36வது ஓவரில் ஆர்ச்சர் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை ஹூக் செய்ய ஆசைப்பட்டார்.

100 ரன்களில் அவுட்
ஆனால், பந்து சரியாக படாமல் ஆன் திசையில், நேராக மார்க் உட்டிடம் கேட்ச் ஆக மாறியது. அவர் அவுட்டாவதற்கு முன்பாக, வார்னரும், பின்சும் குவித்த ரன்கள் ஆஸி. இன்னிங்சுக்கு முக்கியமானது. வார்னர் 53 ரன்கள் குவித்தார்.

முதல் விக். 123 ரன்கள்
அவர் சந்தித்த பந்துகள் 61. வார்னர், பின்ச் கூட்டணி முதல் விக்கெட்டுக்காக 22.4 ஓவர்களில் 123 ரன்கள் எடுத்தனர். முதலில் வார்னர், மொயின் அலி பந்தை பேக் புட் பஞ்ச் ஆட முயன்று ஆப் திசையில் ரூட்டிடம் கேட்ச் ஆனார். ஆஸி. இன்னிங்சில், 61 பந்துகளில் அரைசதம் கண்டவர் பிறகு 116 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் அவரது இன்னிங்ஸ் சிறப்பு.

கடந்த 12 ஆட்டங்கள்
இன்னும் சொல்லப்போனால் அவரது கடந்த 12 இன்னிங்சில் ஒரு கணக்கு இருக்கிறது. அந்த 12 போட்டிகளில் அவர் குவித்தது 947 ரன்கள். அடித்த சதங்களின் எண்ணிக்கை 4. சராசரியாக 86 ரன்கள் எடுத்திருக்கிறார். ஸ்டிரைக் ரேட் 94.51 ஆகும்.

சொதப்பல் பின்ச்
அதற்கு முன்னதாக சொதப்பலோ சொதப்பல். 12 ஆட்டங்களில் களத்தில் நின்று எடுத்ததோ வெறும் 262 ரன்கள் தான். ஒரு சதமும் கிடையாது. சராசரி சொல்லிக் கொள்ளும் படி இல்லை. வெறும் 21.83 தான். ஸ்டிரைக் ரேட் 71.58.


Click it and Unblock the Notifications