Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பயப்படுறியா குமாரு..? பாகிஸ்தானை கிண்டலடித்த ஆஸி. கேப்டன்.. ஆடுகளம் மீது பாட் கம்மின்ஸ் புகார்

ராவல்பிண்டி: பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

24 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலிய அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டதால் பெரும் எதிர்பார்ப்புடன் போட்டி நடைபெற்றது.

ஆனால் இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சே 5வது நாள் காலையில் தான் முடிந்தது. அந்த அளவுக்கு மட்டமான ஆடுகளமாக அமைந்தது.

14 விக்கெட்

14 விக்கெட்

போதாத குறைக்கு பாகிஸ்தான் வீரர்களும் ஆமை வேகத்தில் விளையாடி ரன்களை சேர்த்தனர். முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 476 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 459 ரன்களும் எடுத்தன.5வது நாளில் மதிய நேரத்திற்கு முன்பு தான் பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் களமிறங்கி விக்கெட் இழப்பின்றி 252 ரன்கள் எடுத்தது. மொத்தம் 5 நாளில் 14 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தப்பட்டுள்ளது.

வேண்டுமென்றே செய்தனர்

வேண்டுமென்றே செய்தனர்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ், ராவல்பிண்டியில் அமைக்கப்படும் வழக்கமான பிட்ச் இம்முறை இல்லை. எங்களது வேகப்பந்துவீச்சு எடுபடக் கூடாது என்பதற்காகவே இந்த மாதிரி ஒரு ஆடுகளத்தை பாகிஸ்தான் தயாரித்துள்ளனர். ஆனால் இது ஒரு நல்ல தொடக்கம் தான் என்று சொல்வேன்.

முயற்சி

முயற்சி

ஆசிய பிட்ச்களில் டிரா செய்வதே பெரியது தான்.நாங்கள் விக்கெட்டுகளை வீழ்த்த பல முயற்சி செய்தோம். ஆனால் எதுவும் பலன் தரவில்லை. 3 நாட்கள் எங்கள் வீரர்கள் களத்தில் பந்துவீசினார்கள். ஒவ்வொரு வீரர்களும் 25 ஓவர் வரை வீசி இருப்போம். பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகும் என நினைத்தோம். ஆனால் அதுவும் நிகழவில்லை.

Recommended Video

Women’s WC 2022: Indian team hang out with Pakistan captain Bismah's daughter Fathima|OneIndia Tamil
மீம்ஸ்

மீம்ஸ்

இதனிடையே, ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதை விமர்சித்து பல்வேறு மீம்ஸ்களும் சமூக வலைத்தளத்தில் உலா வந்தது. ஆடுகளம் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது ஏமாற்றத்தை தெரிவித்தனர், இந்த நிலையில், ராவல்பிண்டி ஆடுகளத்தை மோசம் என்று வரையறைப்படுத்த ஐசிசி மறுத்துவிட்டது.

Story first published: Wednesday, March 9, 2022, 15:54 [IST]
Other articles published on Mar 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+