Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்பின்னர்களிடம் புலி.. ஷார்ட் பால் வந்தால் எலி.. மீண்டும் ஆரம்பித்த இஷான் கிஷன்.. பீதியில் ரசிகர்கள்

மொஹாலி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் வெறும் 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்.

ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான குரூப் போட்டியில் கேஎல் ராகுல் காயம் காரணமாக களமிறங்க முடியாததால், இஷான் கிஷனுக்கு இந்திய அணியின் மிடில் ஆர்டரில் வாய்ப்பு வழங்கப்பட்டது. 66 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போதும், அசராமல் அதிரடியாக விளையாடி 81 ரன்களை குவித்து இந்திய அணியின் மானம் காத்தார் இஷான் கிஷன்.

Australia Captain Pat Cummins Exposed the Short Ball weakness of Ishan Kishan in the 1st ODI at Mohali

இதனால் இந்திய அணிக்கு சரியான நேரத்தில் இடதுகை பேட்ஸ்மேன் கிடைத்துவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதேபோல் இன்னும் சிலர், ஒரேயொரு இன்னிங்ஸை மட்டும் வைத்து இஷான் கிஷனின் திறமையை முடிவு செய்ய வேண்டாம் என்று விமர்சனம் வைத்தார்கள். அதன்பின் ஆசியக் கோப்பை தொடரில் இஷான் கிஷன் ஆடிய அடுத்த 3 போட்டிகளில் 62 ரன்களை மட்டுமே சேர்த்தார்.

குறிப்பாக வங்கதேச அணிக்கு எதிரான அழுத்தம் நிறைந்த போட்டியில் வெறும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் இஷான் கிஷன் மிடில் ஆர்டருக்கு சரியான பேட்ஸ்மேன் தானா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் வெறும் 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்திய மண்ணில் ஸ்பின்னர்களை டவுன் தி டிராக் வந்து இறங்கி ஆடும் தைரியம் கொண்ட இஷான் கிஷன், வேகப்பந்துவீச்சாளர்கள் என்றாலே திணறுவதை மீண்டும் தொடங்கி இருக்கிறார். ஏற்கனவே ஷார்ட் பால்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று நுணுக்கத்தை செயல்படுத்த முடியாமல் இஷான் கிஷன் விளையாடி வருகிறார். இதனையறிந்த கம்மின்ஸ், சரியாக ஷார்ட் பாலை வீசி விக்கெட்டை கைப்பற்றினார். ஷார்ட் பால் வீசப்பட்டால் இஷான் கிஷன் புல் ஷாட் அல்லது ஹூக் ஷாட்டை தான் பெரும்பாலும் விளையாட முயற்சிக்கிறார். ஆ

னால் புல் ஷாட் ஆடுவதற்கும், ஹூக் ஷாட் ஆடுவதற்கும் உடல் அந்த வீரரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால் இஷான் கிஷனுக்கு ஷார்ட் பால் வீசினாலே உடலில் நடுக்கம் வந்தது போல் தடுமாறுகிறார். கால்களை பின் நகர்த்தி புல் ஷாட்டிற்கு செல்லாமல், கால்களை நகர்த்தால் அதே இடத்தில் ஆடி விக்கெட் கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். உலகக்கோப்பை நெருங்கி வரும் சூழலில், இஷான் கிஷன் மீண்டும் ஷார்ட் பால்களை எதிர்கொள்ள தெரியாமல் திணறுவது ரசிகர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Friday, September 22, 2023, 21:55 [IST]
Other articles published on Sep 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+