Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்படி வாங்க வழிக்கு.. உண்மையை ஒப்பு கொண்ட ஆஸி.. ஆடுகளம் குறித்து கேப்டன் கம்மின்ஸ் கருத்து

நாக்பூர் : இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிய நாக்பூர் டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் குறித்து ஒரு வழியாக ஆஸ்திரேலியா உண்மையை ஒப்பு கொண்டுள்ளது.

போட்டி தொடங்குவதற்கு முன்பு ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லை என்று ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஊடகங்கள் குற்றம் சாட்டினர். ஆனால் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் விளையாடிய அதே மைதானத்தில் தான் இந்திய வீரர்கள் 400 ரன்கள் குவித்தனர்.

குறிப்பாக ஆடுகளத்தை இந்தியா கடைசி நேரத்தில் இடது கை பேட்ஸ்மன்களுக்கு நெருக்கடி தரும் வகையில் மாற்றியதாக ஆஸ்திரேலியா உருட்டியது.

பாராட்டு

பாராட்டு

எனினும் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அக்சர்பட்டேல் ஜடேஜா என இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலியா குற்றச்சாட்டு சுக்குநூறாக உடைந்தது. இந்த நிலையில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணி கேப்டன் இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் மிக வேகமாக நகர்ந்து சென்று மாறிவிடுகிறது. இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள் .அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

அபாயகரமாக இல்லை

அபாயகரமாக இல்லை

சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் விளையாடும் போது கடினமாக உழைக்க வேண்டும். இந்திய அணியில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினார். ஆடுகளம் முதல் இன்னிங்ஸ் போது சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் பேட்டிங் செய்ய முடியாத அளவிற்கு கடினமாக இல்லை. நாங்கள் முதலில் இன்னிங்ஸில் ஒரு நூறு ரன்கள் கூடுதலாக அடித்திருக்க வேண்டும். அது எங்களுடைய தவறுதான்

பெரிய இன்னிங்ஸ்

பெரிய இன்னிங்ஸ்

இந்த ஆடுகளத்தில் முதலில் ரன் சேர்ப்பது கொஞ்சம் கடினமாக உள்ளது. இருப்பினும் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் நான்கு பேர்கள் இன்னிங்ஸ் சிறப்பாக தொடங்கினார்கள். இனிவரும் ஆட்டத்தில் பேட்ஸ்மேன்கள் இன்னிங்ஸை தொடங்கி சில பந்துகளை தாக்குப்பிடித்த பிறகு பெரிய ஸ்கோர் ஆக மாற்ற வேண்டும். அறிமுக வீரராக களம் இறங்கிய முர்ஃபி பிரமாதமாக பந்து வீசினார். இந்தப் போட்டியில் அவர்தான் என்னை மிகவும் கவர்ந்தார்.

நெருக்கடி

நெருக்கடி

எங்களுடைய அணி வீரர்கள் அதிக ஓவர்களை வீசி இருக்கிறோம். நாங்கள் மட்டும் கூடுதலாக ஒரு நூறு ரன்கள் முதல் இன்னிங்சில் அடித்திருந்தால் அது இந்திய அணிக்கு பெரும் நெருக்கடியை கொடுத்திருக்கும். இனி வரும் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் தங்களின் திறனை வெளிப்படுத்தி விளையாட வேண்டும் என்று கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இதேபோன்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர்கள் ஹைடன், மார்க் வாக் ஆகியோர் ஆடுகளம் குறித்து பல முணுமுணுப்புகள் பேசப்பட்டன. ஆனால் அந்த அளவிற்கு ஆடுகளம் பேட்டிங்கிற்கு அபாயமாக செயல்படவில்லை என்பதே உண்மை.

முன்னாள் வீரர்கள் கருத்து

முன்னாள் வீரர்கள் கருத்து

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடவில்லை. மொத்தத்தில் ஸ்மித் மற்றும் லாபஸ்சேன் மட்டும்தான் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இனிவரும் போட்டியில் ஆஸ்திரேலியா கடுமையாக உழைத்து தன்னம்பிக்கை கொண்டு விளையாடினால் மட்டுமே இது போன்ற தோல்வியை தவிர்க்க முடியும் என்று கூறியுள்ளனர். இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 17ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

Story first published: Saturday, February 11, 2023, 18:23 [IST]
Other articles published on Feb 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+