Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு கேப்டன் ஆகும் ஸ்டீவ் ஸ்மித்.. பேட் கம்மின்ஸ் விலகல்.. ஆஷஸ் தொடரில் மாற்றம்

கான்பெரா: இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடர் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அணியின் அனுபவ வேகப் பந்துவீச்சாளரும், கேப்டனுமான பேட் கம்மின்ஸ், முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக, அனுபவ வீரர் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக அணியை வழிநடத்துவார் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு, பேட் கம்மின்ஸ் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இதனால், அவர் எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை.

அடுத்து வரவிருக்கும் ஆஷஸ் தொடரின் முதல் போட்டி, பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நவம்பர் 21 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கு முன்னர் கம்மின்ஸ் முழு உடற்தகுதியை எட்டிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் காயத்திலிருந்து முழுமையாக மீளாததால், முதல் டெஸ்டில் பங்கேற்க மாட்டார் என்பதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா இன்று உறுதி செய்துள்ளது. ஆஷஸ் கோப்பையைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு, இது மிகப்பெரிய அடியாகக் கருதப்படுகிறது.

Australia captain Pat Cummins Ruled Out of First Ashes Test Steve Smith Named Captain

இரண்டாவது டெஸ்டில் பங்கேற்பாரா?

கம்மின்ஸின் காயம் குறித்துப் பேசிய ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட், "கம்மின்ஸ் மீண்டும் ஓட்டப் பயிற்சியைத் தொடங்கிவிட்டார். இந்த வார இறுதியில் அவர் வலைப்பயிற்சியில் பந்துவீசத் தொடங்குவார். அவர் காயத்திலிருந்து மீண்டு வர நான்கு வாரங்களுக்கு மேல் ஆகும். துரதிர்ஷ்டவசமாக முதல் போட்டிக்கு போதிய அவகாசம் இல்லை. ஆனால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்பார் என்று நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம்" என்று கேன்பராவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பிரிஸ்பேனில் டிசம்பர் 4 ஆம் தேதி தொடங்கும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கம்மின்ஸ் பங்கேற்பது, அவரது வலைப்பயிற்சியின் முன்னேற்றத்தைப் பொறுத்தே அமையும். மேலும், "கம்மின்ஸ் எங்களுடன் பெர்த் வருவார். அவர் அணியுடன் இருந்து தனது ஆலோசனைகளை வழங்குவார்" என்றும் மெக்டொனால்ட் உறுதிப்படுத்தினார்.

மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்:

கடந்த 2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 'சாண்ட்பேப்பர்' சர்ச்சை காரணமாக கேப்டன் பதவியை இழந்த ஸ்டீவ் ஸ்மித், மீண்டும் அணியை வழிநடத்த உள்ளார். பேட் கம்மின்ஸ் 2021 நவம்பரில் கேப்டனாகப் பொறுப்பேற்ற பிறகு, அவருக்குப் பதிலாக ஸ்மித் இதுவரை ஆறு டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாகச் செயல்பட்டுள்ளார்.

"ஸ்டீவ் ஸ்மித் போன்ற ஒரு அனுபவமிக்க வீரர் கேப்டனாக இருப்பது எங்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம். அவர்கள் இருவரும் இணைந்து சிறப்பாகச் செயல்படுவார்கள்," என்று மெக்டொனால்ட் கூறினார்.

கம்மின்ஸுக்குப் பதிலாக, வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட் அணியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. 36 வயதான போலண்ட், இதுவரை விளையாடிய 14 டெஸ்ட் போட்டிகளில், 16.53 என்ற அபாரமான சராசரியுடன் 62 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, October 27, 2025, 14:34 [IST]
Other articles published on Oct 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+