Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் கண்டதை வார்த்தையால் விவரிக்க முடியவில்லை.. வரலாற்றிலேயே சிறந்த இன்னிங்ஸ்- ஆஸி. கேப்டன் கம்மின்ஸ்

மும்பை : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற விதம் நமது வாழ்க்கைக்கு ஒரு முக்கியமான பாடத்தை கற்றுக் கொடுக்கிறது.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்தாலும் தோல்வியின் விளிம்பில் இருந்தாலும் வெற்றி பெறலாம் என்பதை இந்த ஆட்டம் நமக்கு ஒரு பாடமாக கற்றுக் கொடுக்கிறது.

Australia captain pat cummins says he cant able to describe what happened today

இதை தான் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறி இருக்கிறார். போட்டி முடிந்த பிறகு பேசிய ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ், இன்று நான் கண்ட ஆட்டத்தை வார்த்தையால் எப்படி விவரிக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ளார். மேக்ஸ்வெலின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்ததாக கூறியுள்ள அவர் ஆஸ்திரேலியா பெற்றதிலேயே மிகச்சிறந்த வெற்றி இதுவாகும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து பேசி அவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் நடந்த மிகப் பெரிய வெற்றியாக இதை கருதுகிறேன். எதிர்காலத்தில் மக்கள் சொல்வார்கள், ஆம் இந்த போட்டி நடைபெற்ற போது நான் மைதானத்தில் இருந்து தான் பார்த்தேன் என்று பிற்காலத்தில் கூறுவார்கள். மேக்ஸ்வெல் ஆட்டம் பிரமாதமாக இருந்தது. அவர் நெருக்கடியான கட்டத்தில் கூட அமைதியாக இருந்தார்.

தோல்வியின் விளிம்பில் கூட அவர் ஒரு திட்டத்துடன் விளையாடினார். 200 ரன்கள் அடிக்கவேண்டும் என்ற இக்கட்டான நிலையில் இருந்த போது கூட இந்தப் போட்டியில் அவர் வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார். இது நிச்சயமாக ஸ்பெஷலான ஆட்டம் தான். மேக்ஸ்வெல் விளையாட முடியாமல் இருந்தபோது கூட அவரை பெவிலியனுக்கு அழைக்கலாம் என்றுதான் நினைத்தோம்.

ஆனால் மேக்ஸ்வெல் நான் கடைசிவரை களத்தில் நிற்பேன் என்று கூறிவிட்டார். நீங்கள் தோல்வியில் விளிம்பில் இருந்தாலும் எந்த சூழலில் இருந்தாலும் உங்களால் வெற்றி பெற முடியும் என்பதை நீங்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். அதைத்தான் மேக்ஸ்வெல் இன்னிங்ஸ் காட்டுகிறது. எங்கள் அணி மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. தற்போது நாங்கள் அரை இறுதி சுற்றுக்கு சென்று விட்டோம்.
நினைக்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறது.

அடுத்தது என்ன நடக்கும் என்பது குறித்து பேசவோ யோசிக்கவோ இது நேரமில்லை. இந்த மகிழ்ச்சியை இப்படியே நிறுத்தி வைக்கிறேன். இன்றைய ஆட்டம் எங்களுக்கு ஒரு சிறப்பான ஆட்டம் என்று சொல்லிவிட முடியாது. டாஸ் இன்றைய ஆட்டத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. முதல் 20 ஓவரில் எப்படி விளையாட வேண்டும் என்பதுதான் முக்கியம். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் நிறைய விஷயத்தை இன்னும் சிறப்பாக விளையாடியிருந்திருக்க வேண்டும் என்றும் பாட் கம்மின்ஸ் கூறினார்.

Story first published: Wednesday, November 8, 2023, 0:03 [IST]
Other articles published on Nov 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+