For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுக்கு முன் வந்தவர்கள் போல் நாங்கள் கிடையாது.. உங்களுடைய சவாலை ஏற்கிறோம்.. பாட் கம்மின்ஸ் கருத்து

நாக்பூர் : இந்திய மண்ணில் கடந்த 19 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட் தொடரை கூட வென்றதில்லை. இந்த நிலையில் வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டிய உத்வேகத்துடன் ஆஸ்திரேலியா அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தலைமையிலான வீரர்கள் இந்தியா வந்துள்ளார்கள்.

ஆசஸ் தொடரை விட இந்தியாவில் வெற்றி பெறுவது தான் முக்கியம் என்று ஆஸ்திரேலிய வீரர்கள் பேசி இருப்பது அவர்கள் வெற்றிக்காக எவ்வளவு குறியாக இருக்கிறார்கள் என்பதைய இது காட்டுகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், இதற்கு முன்பு வந்த அணிகளை காட்டிலும் நாங்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள் என்று தெரிவித்தார்.

சுமந்து வரவில்லை

சுமந்து வரவில்லை

மேலும் பேசிய பாட் கம்மின்ஸ், நாங்கள் எங்களுடைய வெற்றியையும் தோல்வியையும் சுமந்து கொண்டு சென்றது கிடையாது. இதனால் எங்களுக்கு நெருக்கடி இருக்காது. இந்தியாவில் விளையாடுவது கடினம் என்று எங்களுக்கு தெரியும். இந்திய கிரிக்கெட் அணியும் திறமையான வீரர்களை வைத்திருக்கிறார்கள். அதுவும் அவர்களை சொந்த மண்ணில் எதிர்கொள்வது நிச்சயம் எங்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

மிகவும் கடினம்

மிகவும் கடினம்

என்னுடைய சிறந்த முயற்சியை நாங்கள் வெளிப்படுத்துவோம். இந்தியாவில் பொறுத்தவரை முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்து முன்னிலை பெற வேண்டும். அது மற்ற நாட்டை காட்டிலும் ஆசிய கண்டங்களில் முதல் இன்னிங்ஸ் முன்னிலை மிகவும் முக்கியமாகும். நாங்கள் பெரிய இலக்கை எட்ட முயற்சி செய்வோம். அதுவும் சுழற் பந்துவீச்சு தான் ஆடுகளத்தில் எடுபட போகிறது என்று தெரிந்து விட்டது .இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடுவது மிகவும் கடினமாக இருக்கும்.

கடும் சவால்

கடும் சவால்

இடது கை பேட்ஸ்மேன்கள் விளையாடும் போது அவர்கள் பந்தை எதிர்கொள்ளும் இடத்தில் ஆடுகளம் கடினமாக மாறிவிடும். இது நிச்சயம் கடும் சவாலை எங்களுக்கு கொடுக்கும். நான் ஆடுகளத்தையும் பார்த்தேன். இதை வைத்து இந்திய அணி வீரர்கள் எப்படி பந்து வீசப் போகிறார்கள் என்று எங்களுக்கு தெரிந்து விட்டது. எனினும் இந்த சவாலை நாங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். நிச்சயம் இது மகிழ்ச்சியாக இருக்கப் போகிறது.

250 ரன்கள்

250 ரன்கள்

சில சமயம் போட்டி கடும் சிக்கலை எங்களுடைய பேட்ஸ்மேன்களுக்கு கொடுக்கும். முதல் இன்னிங்ஸ் பெரிய ரன்கள் அடிக்க வேண்டியது முக்கியம். நாங்கள் விளையாடப் போகும் நான்கு மைதானமும் வேறு மாதிரி செயல்படும் என நினைக்கிறேன். 250 ரன்கள் அடித்தாலே நல்ல ஸ்கோராக இருக்கும் என கருதுகிறேன். சில மைதானங்களில் நீங்கள் 500 ரன்கள் அடிக்க வேண்டும். அதை ஆடுகளத்தை பார்த்து தான் முடிவு செய்து விளையாட வேண்டும். எல்லா சவால்களுக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் அணியின் சிறந்த பந்துவீச்சாளர் என்றால் அது இம்முறை நாதன் லயான் தான்.

3 சுழற்பந்துவீச்சாளர்கள்

3 சுழற்பந்துவீச்சாளர்கள்

லயான் இந்த தொடரில் அதிகபட்ச ஓவர்களை வீச உள்ளார். அவருக்கு தான் எங்களை விட அதிக அனுபவம் இருக்கிறது. இந்த தொடருக்காக அவர் கடினமாக உழைத்து வருகிறார். எங்களுடைய பந்துவீச்சை அவர்தான் தலைமை தாங்க உள்ளார் என்று பேட் கமிண்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய அணியைப் போலவே முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மூன்று சுழற் பந்து வீச்சாளர்களை வைத்து களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Story first published: Wednesday, February 8, 2023, 23:26 [IST]
Other articles published on Feb 8, 2023
English summary
Australia captain Pat cummins speaks about facing spin challenge and pitch இதுக்கு முன் வந்தவர்கள் போல் நாங்கள் கிடையாது.. உங்களுடைய சவாலை ஏற்கிறோம்.. பாட் கம்மின்ஸ் கருத்து
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+