Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னங்க பேட்டிங் இது.. எரிந்து விழும் ஸ்மித்!

கொல்கத்தா : ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பேட்டிங்கில் கோட்டை விடுவதை நிறுத்த வேண்டும் என்று கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கடிந்துள்ளார், இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டியிலும் தோல்வியடைந்ததையடுத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான ஒரு நாள் சர்வதேச போட்டியில் இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த நிதானமாக விளையாடினார் கேப்டன் விராட் கோலி. முதலில் ரஹானேவுடன் அணி சேர்ந்து 19.5 ஓவர்களில் 100 ரன்களை எடுத்தார்.

விராட் கோஹ்லி 31வது சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 107 பந்துகளில் 92 ரன்களை எடுத்து அவுட் ஆனார். இந்திய அணி 50 ஓவர்களில் 252 ரன்கனை அடித்தது. ஆஸ்திரேலியா அணி 253 ரன்களை இலக்காக கொண்டு விளையாடித் தொடங்கியது.

 இந்தியா முன்னிலை

இந்தியா முன்னிலை

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தாததால் அந்த அணி 43.1 ஓவரில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 50 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோற்றதால் இந்தியா 2க்கு 0 என்ற கணக்கில் 5 போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலையில் இருக்கிறது.

 ஸ்மித் கோபம்

ஸ்மித் கோபம்

ஆஸ்திரேலிய அணி தொடர் தோல்விகளை சந்திப்பதால் தனது அணி வீரர்கள் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியுள்ளார். "வழக்கத்தை விட் சற்று அதிகமாகவே ஆஸி அணி சறுக்குவதாக நான் நினைக்கிறேன். நாங்கள் பல விதத்திலும் விளையாட்டில் தோல்வி கண்டுள்ளோம், அதை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது" என்று ஸ்மித் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது கூறியுள்ளார்.

 அணிக்கு அட்வைஸ்

அணிக்கு அட்வைஸ்

"மைதானத்திற்கு வெளியே அமர்ந்து கொண்டு இது நிறுத்தப்பட வேண்டிய ஒன்று என எளிதில் சொல்லிவிடலாம். அணி இப்போது விளையாடும் முறை சரியானதாக இல்லை என்றால் அதை மாற்ற வேண்டியது அவசியம்."

 மாறினால் தான் வெற்றி

மாறினால் தான் வெற்றி

மற்றவர்களை நோக்கி குற்றம்சாட்டுவது கடினமான விஷயம். ஆனால், உண்மை என்னவென்றால், அணியினர் விளையாடும் போக்கு மாற வேண்டும், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அப்படி செய்தால் மட்டுமே நல்ல முறையில் விளையாட முடியும். பல வகைகளிலும் தோல்வியைத் தழுவுவது நிச்சயம் நலன் பயக்காது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்" என்று பொரிந்து தள்ளிவிட்டார் ஸ்டீவ் ஸ்மித்.

Story first published: Friday, September 22, 2017, 10:21 [IST]
Other articles published on Sep 22, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+