Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முட்டாள் போல காட்சியளித்தேன்.. அஸ்வினுக்கு போன் செய்து.. மன்னிப்பு கேட்ட ஆஸி. கேப்டன்.. பரபரப்பு!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தான் நடந்து கொண்ட விதம் தவறாக இருந்தது என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நேற்று நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்தது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அஸ்வின் - விஹாரி இருவரும் அதிரடியான டெஸ்ட் ஆட்டத்தை ஆடி போட்டியை டிரா செய்தனர்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நேற்று நடந்த ஆட்டம் கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான ஆட்டமாக மாறியுள்ளது.

கேப்டன்

கேப்டன்

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் இந்திய வீரர் அஸ்வினை தனது வார்த்தைகள் மூலம் தொடர்ந்து சீண்டி வந்தார். அடுத்த போட்டிக்கு ரெடியாக்குங்கள் என்று கிண்டல் செய்ய தொடங்கியவர் ஐபிஎல்லில் உங்களை யாருக்குமே பிடிக்காதாமே உண்மையா என்று கேட்டார்.

மோசம்

மோசம்

அதோடு அஸ்வினை பெயின் ஒருமுறை கெட்ட வார்த்தையால் கூட திட்டினார். முதலில் அஸ்வின் இதற்கு எல்லாம் அதிரடி பதில் அளித்தார்.அதன்பின் பொறுமையிழந்த அஸ்வின்.. டிம் பெயின் பேச்சை நிறுத்தினால்தான் ஆடுவேன். அதுவரை ஆட மாட்டேன் என்று கூறினார். இந்த நிலையில் டிம் பெயின் தன்னுடைய பேச்சிற்கு மன்னிப்பு கேட்டு உள்ளார்.

தவறான செயல்

தவறான செயல்

டிம் பெயின் அளித்துள்ள பேட்டியில் , நான் செயல்பட்ட விதத்திற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான் என்னுடைய அணியை நன்றாக வழி நடத்த விரும்புகிறேன். நான் ஒரு நல்ல தலைமையாக நேற்று செயல்படவில்லை.

மன்னிப்பு

மன்னிப்பு

ஆட்டத்தின் பிரஷர் காரணமாக நான் தவறாக செயல்பட்டுவிட்டேன். என்னுடைய அணியின் தரத்தை விட குறைவாக நான் நடந்து கொண்டேன். நான் ஒரு மனிதன். நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். கடந்த 18 மாதங்களாக நாங்கள் தரமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தினோம்.

நேற்று சரிவு

நேற்று சரிவு

ஆனால் நேற்றைய ஆட்டம் நாங்கள் சம்பாதித்த மதிப்பில் சரிவை ஏற்படுத்தி விட்டது. போட்டி முடிந்தவுடன் அஸ்வினுக்கு கால் செய்தேன். அவரிடம் நான் முட்டாள் போல காட்சி அளித்தேன். நான் அடிக்கடி பேசினேன். ஆனால் கேட்ச் விட்டுவிட்டேன் என்று கூறினேன். அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.

போன் செய்தார்

போன் செய்தார்

நாங்கள் அதன்பின் சிரித்துகொண்டோம். எல்லாம் அதன்பின் சரியாகிவிட்டது. அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும். பிரிஸ்போன் ஆட்டம் எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன், என்று டிம் பெயின் பேட்டி அளித்துள்ளார்.

Story first published: Tuesday, January 12, 2021, 11:05 [IST]
Other articles published on Jan 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+