ஆஸ்திரேலியா தலைமை பயிற்சியாளர் டேரன் லேமன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் லேமன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று சிட்னியில் நடைபெற்றது. இதில் இந்தியா 49.4 ஓவரில் 331 ரன்கள் எடுத்து 330 ரன்னை சேஸிங் செய்தது. ஆஸ்திரேலிய மண்ணில் அதிகபட்ச சேஸிங் இதுவாகும்.

இதனிடையே ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் லேமனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிட்னியில் உள்ள ராயல் பிரின்ஸ் ஆல்பர்ட் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் டேரன் லேமனுக்கு சிறிது காலம் ஓய்வு தேவை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான டி20 தொடர் போட்டியின் போது மைக்கேல் டி வெண்டோ அணியை வழி நடத்திச் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications