For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வங்கதேசத்திடம் படுதோல்வி.. வெளியான வீடியோ.. ஆஸி., நிர்வாகியை விட்டு விளாசிய கோச் ஜஸ்டின் லாங்கர்

டாக்கா: வங்கதேச அணி வீரர்கள் வெற்றியை கொண்டாடும் வீடியோவை வெளியிட்டதற்காக 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' நிர்வாகியுடன் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் மோதலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

டி20 உலகக் கோப்பைத் தொடர் வரும் நவம்பர் மாதம் அமீரகத்தில் தொடங்கவிருக்கும் நிலையில், பல அணிகள் தங்களுக்கான சிறந்த அணியை கட்டமைக்க அதிக டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றன.

அதன்படி ஆஸ்திரேலியாவும் அடுத்தடுத்து டி20 தொடர்களில் விளையாடியது. கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய ஆஸ்திரேலியா, டி20 தொடரை மிக மோசமாக தோற்றது.

 சாதித்த இந்திய ஹாக்கி அணி.. தங்கள் வெற்றியாய் கொண்டாடும் கிரிக்கெட் வீரர்கள் - கம்பீர் தனி ரகம் சாதித்த இந்திய ஹாக்கி அணி.. தங்கள் வெற்றியாய் கொண்டாடும் கிரிக்கெட் வீரர்கள் - கம்பீர் தனி ரகம்

 மோசமான தோல்வி

மோசமான தோல்வி

இந்த நிலையில், வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலியா, அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில், யாருமே எதிர்பார்க்காத வகையில் இத்தொடரை 4-1 என்ற கணக்கில் மிக மோசமாக தோற்றது ஆஸ்திரேலியா. அதுவும் கடைசி டி20 போட்டியில், 13.4வது ஓவரில் வெறும் 62 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட்டானது ஆஸ்திரேலியா. இந்த 62 ரன்கள் என்பது, டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அடித்த மிகக் குறைவான ஸ்கோராகும். இதற்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிராக 79 ரன்கள், இந்தியாவுக்கு எதிராக 86 ரன்கள், பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு முறை 89 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதே, டி20- ஆஸ்திரேலிய அணியின் குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது. இப்போது வங்கதேசத்திற்கு எதிராக 62 ரன்கள் எடுத்ததன் மூலம், தனது சாதனையை தானே முறியடித்துள்ளது.

 சாதனை சமன்

சாதனை சமன்

அதுமட்டுமின்றி, டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக ஐந்து முறை டி20 தொடரை இழந்திருக்கிறது. இங்கிலாந்தில் கடந்த 2020ல் நடந்த டி20 தொடரில் 2-1 என்ற கணக்கிலும், ஆஸ்திரேலியாவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும், நியூசிலாந்தில் நடைபெற்ற டி20 தொடரில் 3-2 என்ற கணக்கிலும், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக 4-1 என்ற கணக்கிலும் வரிசையாக தொடரை இழந்து நிற்கிறது ஆஸ்திரேலியா. இதுவரை, 2021 ஆம் ஆண்டில் 11 டி20 போட்டிகளில் ஆஸி., அணி தோல்வியடைந்துள்ளது, இது ஒரு வருடத்தில் ஒரு அணியின் நான்காவது அதிகபட்ச தோல்வியாகும். 2016 ல் இலங்கை 13 போட்டிகளிலும், பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் 2010 மற்றும் 2019ல் 12 முறையும், வங்கதேசம் 2018ல் 11 போட்டிகளிலும் தோற்றிருந்தது. இப்போது ஆஸ்திரேலியா அந்த சாதனையை சமன் செய்திருக்கிறது.

 ஆஸி., வெப்சைட்டில் வீடியோ

ஆஸி., வெப்சைட்டில் வீடியோ

இப்படி தனது மோசமான ஆட்டத்தின் மூலம் அடுத்தடுத்து பல அபத்தமான சாதனைகளை ஆஸ்திரேலியா படைத்து வருகிறது. இந்நிலையில், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் அதிகாரப்பூர்வ தளமான cricket.com.au-ல் வங்கதேச அணி வெற்றி பெற்றதன் வீடியோ வெளியிடப்பட்டது. 3வது டி20 போட்டியில் தோற்று ஆஸ்திரேலியா தொடரை இழந்த பிறகு, வங்கதேச அணி வீரர்கள் மைதானத்திலேயே வெற்றியை ஆரவாரமாக கொண்டாடினர். இதன் வீடியோ ஆஸ்திரேலிய கிரிக்கெட் வெப்சைட்டில் வெளியிடப்பட்டது.

 காரசார வாக்குவாதம்

காரசார வாக்குவாதம்

இதனைக் கண்ட ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மற்றும் அணி மேனேஜர் கேவின் டோவே ஆகியோர் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தளத்தின் நிர்வாகியுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 3வது டி20 போட்டி முடிந்து வீரர்கள் ஹோட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையில், இந்த காரசார வாக்குவாதம் அரங்கேறி இருக்கிறது. இதனை வீரர்களும், ஹோட்டலில் தங்கியிருந்த மற்றவர்களும் நேரில் பார்த்ததாகவும் தெரிகிறது.

 உடன்படவில்லை

உடன்படவில்லை

இந்த விவாதம் குறித்து கருத்து தெரிவிக்க கோச் லாங்கர் மறுத்துவிட்டார். மேனேஜர் டோவி கூறுகையில், "ஆரோக்கியமான சூழல் என்பதை எதையும் நேர்மையாக, வெளிப்படையாக பேசுவதில் தான் இருக்கிறது. இது வீரர்களுக்கு இடையேயோ, அல்லது நிர்வாகிகளுக்கு இடையேயோ நடப்பது சகஜம் தான். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தது. நாங்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் உடன்படவில்லை. அது தனிப்பட்ட முறையில் நடந்திருக்க வேண்டிய நிகழ்வுகளில் ஒன்றாகும்" என்று கூறினார்.

Story first published: Wednesday, August 11, 2021, 19:43 [IST]
Other articles published on Aug 11, 2021
English summary
Justin Langer heated argument with CA staff - ஆஸ்திரேலியா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X