Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

36 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஆஸி வெற்றி.. தொடரை இழந்த இந்தியா.. பேட்டிங் சொதப்பல்

சென்னை : இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 270 ரன்களை வெற்றி அலக்காக நிர்ணயித்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ளது.

இந்த நிலையில் தொடரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசியது.

இந்த போட்டியில் இந்திய அணி எந்த மாற்றத்தையும் செய்யாத நிலையில், ஆஸ்திரேலிய அணி வார்னர் மற்றும் ஏகார் ஆகியோரை தேர்வு செய்தது.

சரிந்த விக்கெட்

சரிந்த விக்கெட்

டிராவிஸ் ட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 68 ரன்களை சேர்த்தனர். அப்போது ஹர்திக் பாண்டியா கையில் பந்து சென்றதும், விக்கெட்டுகள் மளமளவென சரிய தொடங்கியது. டிராவிஸ் ஹெட் 31 பந்தில் 33 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கேப்டன் ஸ்மித் டக் அவுட்டாக மிட்செல் மார்ஷ் 47 ரன்கள் எடுத்து போல்ட் ஆனார்.

சவாலான இலக்கு

சவாலான இலக்கு

இதனையடுத்து டேவிட் வார்னர் மற்றும் மார்னஸ் லாபஸ்சேன் ஆகியோர் ரன்கள் சேர்க்க தொடங்கிய நிலையில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் இருவரும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் ஸ்டோனிஸ் 25 ரன்களும், அலெக்ஸ் கேரி 38 ரன்களும் சேர்த்து பெவிலியன் திரும்பினார். இறுதியில் அபார்ட் 26 ரன்கள் சேர்க்க, ஆஸ்திரேலிய அணி 49 ஓவர் முடிவில் 269 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. குல்தீப், ஹர்திக் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

நல்ல தொடக்கம்

நல்ல தொடக்கம்

270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர் ரோகித் சர்மா 17 பந்துகளில் 30 ரன்களும், சுப்மன் கில் 37 ரன்களும் எடுக்க, முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 65 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து கோலியும், ராகுலும் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.சிறப்பாக விளையாடிய ராகுல் 32 ரன்களில் வெளியேற, அக்சர் பட்டேல் 2 ரன்களில் ரன் அவுட்டார்.

ஆஸி. வெற்றி

ஆஸி. வெற்றி

ஒரு முனையில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 54 ரன்கள் சேர்த்து தேவையில்லாமல் பெரிய ஷாட் ஆடி ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து மூன்றாவது முறையாக கோல்டன் டக் ஆனார். இந்தியாவை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 40 ரன்களில் கேட்ச் ஆனார். ஜடேஜா 18 ரன்களில் வெளியேறியதும், இந்தியாவின் தோல்வியை உறுதியானது. ஷமி இறுதியில் 14 ரன்கள் சேர்த்தும் 5 பந்துகள் எஞ்சிய நிலையில் இந்திய அணி 248 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது.

Story first published: Wednesday, March 22, 2023, 22:27 [IST]
Other articles published on Mar 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+