Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் போட்டியில் வரும் புதிய விதி.. உலகக் கோப்பை பைனலால் ஏற்பட்ட மாற்றம்.. என்ன தெரியுமா?

Recommended Video

Big Bash New Rules | உலகக் கோப்பை இறுதி போட்டியால் ஏற்பட்ட மாற்றம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் வருடந்தோறும் நடைபெறும் பிக் பாஷ் கிரிக்கெட் தொடரில் ஒரு புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் போட்டியின் முடிவில் இரு அணிகளும் ஒரே ஸ்கோர் எடுத்து இருக்கும் பட்சத்தில் சூப்பர் ஓவர் நடத்தப்படும். பின்னர் சூப்பர் ஓவரில் அதிக ரன்கள் எடுத்த அணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

மேலும் சூப்பர் ஓவரில் போட்டி டை ஆனால் அதிக பவுண்டரிகள் மற்றும் ரன் ரேட் அடிப்படையிலும் முடிவு நிர்ணயக்கப்படும். இதுதான் வழக்கம்.

உலக கோப்பை சொதப்பல்

உலக கோப்பை சொதப்பல்

இந்த நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலக கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இவ்விரு அணிகளும் தலா 241 ரன்கள் எடுத்தனர். இதனை அடுத்து சூப்பர் ஓவர் மூலம் முடிவை தீர்மானிக்க முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

சூப்பர் ஓவர் சுற்றிலும் இவ்விரு அணிகளும் தலா 15 ரன்கள் எடுத்ததால் அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பலரும் இந்த முடிவை ஏற்காமல் எதிர்த்தனர். மேலும் இது உலக கோப்பை சொதப்பல் என்று பலராலும் கருதப்பட்டது.

ரசிகர்கள் வைத்த கோரிக்கை

ரசிகர்கள் வைத்த கோரிக்கை

ஐசிசி எடுத்த இந்த முடிவை பெரும்பாலான மக்கள் எதிர்த்தனர். இது இங்கிலாந்து அணிக்கு சாதகமான முடிவு என்றும் நியூஸிலாந்து அணியே வெற்றிக்கு தகுந்த அணி என்று சுமுக வலை தளங்களில் பதிவிட்டனர். மேலும் இன்னும் ஒரு சூப்பர் ஓவர் வைத்து இருக்கலாம். அப்படி வைத்து அதில் யார் வெற்றி பெற்ற அணியை வின்னராக அறிவித்து இருக்கலாம் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.

பிக் பாஷ்

பிக் பாஷ்

இதன் எதிரொலியாக ஆஸ்திரேலியாவில் பிரசித்தி பெற்ற பிக் பாஷ் கிரிக்கெட் தொடரில் ஒரு புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது சூப்பர் ஓவர் முடிவில் இரு அணிகளும் சமமான ரன்கள் இருக்கும் பட்சத்தில் மீண்டும் சூப்பர் ஓவர் வீசப்பட்டு அதில் யார் அதிக ரன்களை சேர்கிறார்கள் என்று பார்க்கப்படும். அப்படி அதிக ரன்கள் எடுப்பவர்களே வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும் என்று ஒரு புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் எப்பொழுது

சர்வதேச கிரிக்கெட்டில் எப்பொழுது

பிக் பாஷ் கொண்டு வந்துள்ள இந்த விதி முறை சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் எப்பொழுது நடைமுறைக்கு வரும் என்று பலரும் எதிர் பார்த்து கொண்டு இருக்கின்றனர். இன்னும் சிலரோ இந்த விதி முறை உலக கோப்பை இறுதி போட்டியில் நடைமுறை படுத்தி இருந்தால் முடிவு வேறு மாதிரியாக இருந்து இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

Story first published: Tuesday, September 24, 2019, 17:53 [IST]
Other articles published on Sep 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+