Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி.யில் நடக்கிறது முத்தரப்பு கிரிக்கெட் தொடர்.. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கிறது ? எப்போது?

மெல்போர்ன் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமன் டோனல் அளித்துள்ள பேட்டியில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலககோப்பை, டி20 உலககோப்பை போட்டிக்கு பிறகு ரசிகர்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்துவது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முத்தரப்பு தொடர் தான்.

கடந்த 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் போட்டியை இந்தியா வென்றதை அவ்வளவுசீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

10 ஆண்டுகள்

10 ஆண்டுகள்

மூன்று அணிகள் தங்களுக்குள் ரவுண்ட் ராபின் அடிப்படையில் 2 முறை மோதிக் கொள்வார்கள். இதில் முதல் 2 இடம் பிடிக்கும் அணி இறுதிப் போட்டியில் மோதுவ்ர்கள். அந்த இறுதிப் போட்டி Best of 3 என்ற அடிப்படையில் நடைபெறும். இந்த முத்தரப்பு போட்டியை ஆஸ்திரேலியா கடந்த 10 ஆண்டுகளாக நடத்தவில்லை.

ஆஸி. திட்டம்

ஆஸி. திட்டம்

அதிகமாக போட்டிகள் நடைபெறுவதால், அணிகளை அழைத்து முத்தரப்பு தொடரை நடத்துவதை ஆஸ்திரேலியா நிறுத்தி கொண்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் ரசிகர்களின் கோரிக்கைக்கு இணங்க முத்தரப்பு தொடரை ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. இதில் முதல் தொடரில் பாகிஸ்தான், இந்தியா அணிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டி

டெஸ்ட் போட்டி

இதே போன்று முத்தரப்பு தொடருக்கு முன்பாக, இந்தியா, , பாகிஸ்தான் அணிகள் டெஸ்ட் போட்டியில் மோதவும் வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனையும் ஆஸ்திரேலியாவிலேயே நடத்த அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்துள்ளது. சமீபத்தில் இந்தியா, பாகிஸ்தான் டி20 உலககோப்பை போட்டியில் மோதின.

காரணம் ஏன்?

காரணம் ஏன்?

மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தை சுமார் 90 ஆயிரம் ரசிகர்கள் கண்டு களித்தனர். இது அந்த மைதானத்தில் அதிக அளவு ரசிகர்களால் பார்க்கப்பட்ட 3வது கிரிக்கெட் போட்டியாகும். இதனால் அதிக வருமானம் கிடைக்கும் என்பதால் ஆஸ்திரேரியா இந்த முயற்சியை எடுத்துள்ளது. ஏற்கனவே இங்கிலாந்தில், இந்தியா, பாக். போட்டியை நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்ததை பிசிசிஐ நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, October 31, 2022, 21:04 [IST]
Other articles published on Oct 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+