Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

14 ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு தடை..? பிக் பேஸை காப்பாற்ற கடைசி முயற்சி.. உச்சக் கட்ட பரபரப்பு

மெல்போர்ன்: தென்னாப்பிரிக்காவில் புதியதாக நடத்தப்படும் கிரிக்கெட் தொடரால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் பெரும் பூகம்பமே வெடித்துள்ளது.

Recommended Video

Asia Cup 2022 தொடருக்கான இந்திய அணியில் BCCI எடுக்கும் ரிஸ்க் l *Cricket

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வெற்றியை தொடர்ந்து உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளும் தங்களுக்கு என டி20 கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகிறது.

இதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடத்தும் பிக் தொடர் பிரபலமானது. தற்போது அந்த தொடருக்கு தான் அபத்து ஏற்பட்டுள்ளது.

பிக் பேஷ் தொடர்

பிக் பேஷ் தொடர்

பிக் பாஸ் லீக் தொடர்கள் ஆஸ்திரேலியாவில் டிசம்பர் மாதம் தொடங்கி ஜனவரி இறுதி வரை நடைபெறும். கிறிஸ்ட்மஸ், புத்தாண்டு விடுமுறையை மையப்படுத்தி இந்த போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த தொடர் நடைபெறும் போது பெரும்பாலான ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் தங்களது தேசிய அணிக்காக விளையாடுவார்கள்.

புதிய தொடர்

புதிய தொடர்

இம்முறை தென்னாப்பிரிக்காவில் ஜனவரி மாதம் ஐபிஎல் பாணியில் டி20 போட்டிகள் நடைபெறுகிறது. மேலும் இதன் அணிகளை ஐபிஎல் தொடரை சேர்ந்த அணி நிர்வாகிகளே வாங்கிவிட்டனர். இதனால், இதன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் அதே காலக்கட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 தொடர் நடத்தப்படுகிறது.

அதிக பணம்

அதிக பணம்

இரண்டு தொடரிலும் இந்தியாவின் கை பின்னால் இருப்பதால், பணமும் இந்த தொடரில் கொட்டப்படுகிறது. இந்த நிலையில், இந்த இரண்ட தொடரிலும் விளையாடுவதற்காக நட்சத்திர வீரர்களை குறிவைத்து ஒப்பந்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் டேவிட் வார்னர், மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ் உள்ளிட்ட 14 வீரர்களுக்கு 3 ஆண்டுக்கு 14 கோடி ரூபாய் தர ஒப்பந்தம் பேசப்பட்டுள்ளது.

தடை விதிக்க வாய்ப்பு

தடை விதிக்க வாய்ப்பு

இது பிக் பாஸ் தொடரில் கிடைக்கும் பணத்தை விட பல மடங்கு அதிகம் என்பதால், முன்னணி ஆஸ்திரேலிய வீரர்கள் வெளிநாட்டு தொடரில் விளையாட முடிவு எடுத்துள்ளனர். அப்படி நடந்தால், 10 ஆண்டுகளுக்கு மேல் நடத்தப்பட்டு வரும் பிக் பாஸ் தொடருக்கு பெரும் சிக்கலாக அமைந்துவிடும். இதனால் என்ன செய்வது என்று விழி பிதுங்கியுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், அனுமதியின்றி விளையாட சென்றால் இனி ஆஸ்திரேலியாவுக்காக விளையாட முடியாது என்று கெடுபிடி விதிக்க உள்ளது. இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வருகிறது.

Story first published: Thursday, August 4, 2022, 23:00 [IST]
Other articles published on Aug 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+