Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலிய ஒருநாள் அணியிலிருந்து சீனியர் வீரர்கள் நீக்கம்.. PBKS ஸ்டார் வீரருக்கு நீக்கம்

மும்பை: ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 17 பேர் கொண்ட ஒருநாள் அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னணி பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஷேன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைத் தொடருக்கு முன்னதாக இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்க தேர்வுக்குழுவினர் முடிவு செய்துள்ளதால் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா உலகக் கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்த லபுஷேன், சமீபகாலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும், டெஸ்ட் அணியில் அவரது இடமும் தற்போது தீவிர பரிசீலனையில் உள்ளது.

Marnus Labuschagne

சமீபகாலமாக பார்ம் அவுட்டில் இருக்கும் லபுஷேன், தனது கடைசி 10 இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்த மாதத்தில் ஜிம்பாப்வேயில் மூன்று ஒருநாள் போட்டிகளிலும், அதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாட உள்ளது.

மும்பை அணியின் கேப்டன் அதிரடி மாற்றம்.. 34 வயதான வீரர் புதிய கேப்டனாக நியமனம்

மும்பை அணியின் கேப்டன் அதிரடி மாற்றம்.. 34 வயதான வீரர் புதிய கேப்டனாக நியமனம்

இந்த போட்டிகளுக்குப் பிறகு, அக்டோபர் மாதம் தென்னாப்பிரிக்காவுடன் டர்பன், கெபெர்ஹா மற்றும் கேப் டவுன் ஆகிய இடங்களில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான டெஸ்ட் அணி பின்னர் அறிவிக்கப்படும்.

தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள ஒருநாள் அணியில் 19 வயது பேட்டிங் இளம் திறமையாளர் ஆலி பீக், 22 வயது ஆல்-ரவுண்டர் ஜோயல் டேவிஸ் மற்றும் 23 வயது கூப்பர் கான்னொலி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் தங்களது உலகக் கோப்பை பட்டத்தைத் தக்கவைப்பதற்கான ஆஸ்திரேலிய அணியின் பயணத்திற்கு இந்தத் தேர்வு ஒரு முக்கிய தொடக்கமாக அமைந்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடர்களில் விளையாடாத மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர்.

வீரர்களின் பணிச்சுமையை நிர்வகிக்கும் நோக்கில், கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தென்னாப்பிரிக்கா தொடருக்கான போட்டிகளில் மட்டும் விளையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் ஸ்பென்சர் ஜான்சன், நாதன் எல்லிஸ், சேவியர் பார்ட்லெட் மற்றும் பில்லி ஸ்டான்லேக் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரை ஆடம் ஜாம்பா மட்டுமே அணியின் ஒரே சிறப்பு சுழற்பந்து வீச்சாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார், மேத்யூ குஹ்னெமேன் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.இது குறித்து பேசிய தலைமை தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி, "அடுத்த ஆண்டு இதே நாடுகளில் உலகக் கோப்பை நடைபெறவுள்ளதால், இந்த ஆறு போட்டிகள் கொண்ட தொடர் எங்களது குழுவிற்கான ஒரு முக்கிய தயாரிப்பு பணியாகும் என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அணியிலிருந்து 7 வீரர்களை வீட்டுக்கு அனுப்பிய நக்வி.. பயிற்சியாளரும் அதிரடி நீக்கம்

Also Read

பாகிஸ்தான் அணியிலிருந்து 7 வீரர்களை வீட்டுக்கு அனுப்பிய நக்வி.. பயிற்சியாளரும் அதிரடி நீக்கம்

ஆஸ்திரேலிய ஒருநாள் அணி விவரம்: மிட்செல் மார்ஷ், பேட் கம்மின்ஸ் (தென்னாப்பிரிக்கா தொடர் மட்டும்), சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கான்னொலி, ஜோயல் டேவிஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், ஆலி பீக், மேட் ரென்ஷா, பில்லி ஸ்டான்லேக், மிட்செல் ஸ்டார்க் (தென்னாப்பிரிக்கா தொடர் மட்டும்), ஆடம் ஜாம்பா.

Story first published: Tuesday, September 1, 2026, 15:08 [IST]
Other articles published on Sep 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+