Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பையை கைப்பற்றுமா நம்பர்-1 அணி ஆஸ்திரேலியா? பலம், பலவீனம் என்ன?

சென்னை: உலக கோப்பை தொடர் வரும் 14ம்தேதி தொடங்க உள்ள நிலையில், ஐசிசி தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா அணியின் விவரத்தை பார்ப்போமா..

கடந்த அக்டோபரில் பாகிஸ்தானுக்கு எதிராக ஸ்வீப் செய்தது, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வென்றது, இங்கிலாந்து, இந்தியா பங்கேற்ற முத்தரப்பு தொடரை வென்றது போன்ற அண்மை கால சாதனைகள் ஆஸ்திரேலியாவின் வலிமையை பறைசாற்றுகின்றன.

அணி விவரம்

அணி விவரம்

மைக்கேல் கிளார்க், ஜார்ஜ் பெய்லி, பட் கம்மின்ஸ், சேவியர் டோஹர்டி, ஜேம்ஸ் பாக்னர், ஆரோன் பின்ச், பிராட் ஹடின், ஜோஷ் ஹசில்வுட், மிட்சேல் ஜான்சன், மிட்ச் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மிட்சல் ஸ்டார்க், டேவிட் வார்னர், ஷேன் வாட்சன். பயிற்சியாளர்: டேரன் லீமன்.

வார்னர், ஸ்மித்

வார்னர், ஸ்மித்

ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க உள்ளனர். டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் அந்த நாட்டின் நம்பிக்கை நட்சத்திர வீரராக உருவாகியுள்ளார். கடந்த வருடத்தில் அவரின் ஒருநாள் போட்டி சராசரி ரன் குவிப்பு 49.18 என்பதில் இருந்து அவரது பேட்டிங் திறனை கணக்கிட முடியும்.

ஜான்சன் வேகம்

ஜான்சன் வேகம்

வாட்சன், மேக்ஸ்வெல், ஹடின் போன்றோரும் பேட்டிங்கிற்கு வலு சேர்க்கின்றனர். ஆஸ்திரேலிய வேகப்பந்து பிரிவு ஜான்சன் மற்றும் ஸ்டார்க்கை நம்பியுள்ளது. இருவருமே 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை ஸ்விங் செய்ய தெரிந்தவர்கள். ஆஸ்திரேலிய பிட்சுகளில் இந்த வேகத்தில் வரும் ஸ்விங் பந்தை எதிர்கொள்வது எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும். இந்த இடது கை வேகப்பந்து ஜோடிக்கு, ஜோஷ் ஹசில்வுட் மற்றும் பட் கமின்ஸ் ஆகிய மிதவேக பவுலர்கள் கை கொடுப்பார்கள் என்று நம்பலாம்.

இதில்தான் வீக்

இதில்தான் வீக்

ஆஸ்திரேலியா ஏதாவது ஒரு பிரிவில் சற்று வீக்காக இருக்கிறது என்றால் அது சுழல்பந்து டிபார்ட்மென்டில்தான். சேவியர் டோஹர்டி மட்டுமே அங்கு முழு நேர ஸ்பின்னர். மேக்ஸ்வெல், ஸ்மித், கிளார்க் போன்ற வீரர்கள் சில ஓவர்களை வீச வாய்ப்புள்ளது. ஆனால் ஸ்பின்னை நம்பாமல், முழுக்க வேகப்பந்தை நம்பியே களமிறங்க திட்டமிட்டுள்ளது ஆஸ்திரேலியா.

Story first published: Tuesday, February 10, 2015, 16:33 [IST]
Other articles published on Feb 10, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+