Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மூட்டை முடிச்ச தூக்கிட்டு போ..!! மகனை பழிவாங்கிய ஆஸ்திரேலிய வீரர் பிரட் லீ..!!

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீக்கு உலகம் முழுவதும் பல்வேறு ரசிகர்கள் உள்ளனர்.

Recommended Video

மூட்டை முடிச்ச தூக்கிட்டு போ..!! மகனை பழிவாங்கிய ஆஸ்திரேலிய வீரர் பிரட் லீ..!!

தனது அசுர வேகத்தாலும், யாக்கர்களாலும் எதிரணி பேட்ஸ்மேன்களை கலங்க செய்யக் கூடியவர்

பிரட் லீயின் வேகத்தை எதிர்கொள்ள முடியாமல் பல பேட்ஸ்மேன்கள் தூக்கத்தை தொலைத்த கதை பல உண்டு

அதிவேக பிரட்லீ

அதிவேக பிரட்லீ

ஆஸ்திரேலிய அணிக்காக 76 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 310 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில் 380 விக்கெட்டுகளையும் பிரட் லீ வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை மெக்ராத்துடன் பிரட் லீ பகிர்ந்துள்ளார். பிற்காலத்தில் காயம் காரணமாக அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டு, ஓய்வு பெற்றார்.

மகனுடன் கிரிக்கெட்

மகனுடன் கிரிக்கெட்

பிரட் லீ, ஒரு மியூசியன் என்றாலும், தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக பல்வேறு போட்டிகளில் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், பிரட்லீயும், அவரது மகனும் இடம்பெற்றுள்ள வீடியோ, சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. தற்போது விடுமுறையை கொண்டாடி வரும் பிரட்லீயும், அவரது மகனும் கிரிக்கெட் விளையாடினர்.

ஸ்டம்புகள் சிதறின

ஸ்டம்புகள் சிதறின

அப்போது பிரட்லீ மகனான பிரஸ்ட்சன், பேட்டிங் செய்தார். அப்போது பந்துவீச வந்த பிரட்லீ, மெதுவாக ஜாக்கிங் செய்து பந்துவீச வந்தார். 46 வயதான பிரட்லீ என்ன செய்ய போகிறார் என்று வீடியோவை பார்த்த நமக்கும், தந்தை தானே என்ற நினைப்பு பிரஸ்ட்சனுக்கும் இருந்திருக்கும். ஆனால் பிரட்லீ யாக்கரை வீச அவரது மகன் பிரஸ்ட்சன் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார்

ரசிகர்கள் புகழாரம்

ரசிகர்கள் புகழாரம்

அத்துடன் நிற்காமல் பிரட்லீ, மூட்டையை முடிச்சியை தூக்கிட்டு கிட்டு போ என்று கூற, அவரது மகன் சிரித்து கொண்டே சென்றார். இந்த வீடியோவை பிரட்லீயின் சகோதரரான ஷான் லீ, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.பிரட்லீக்கு வயசானாலும், அவரது ஸ்டைலும், பந்துவீச்சும் கொஞ்சம் கூட மாறவே இல்லை என்று ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இதனால் பிரட்லீ பயிற்சியாளராக இணையலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Friday, December 31, 2021, 16:39 [IST]
Other articles published on Dec 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+