Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

16 வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன்- ஆஸி. கிரிக்கெட் வீரர் சாம்பியனான கதை..

சிட்னி: விளையாட்டு மனிதர்களை எப்படி சாம்பியன்களாக மாற்றும் என்று நாம் பலரை கண்டுள்ளோம். அந்த பட்டியலில் புதியதாக இணைந்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்தீவ் வேட்.

Recommended Video

Matthew Wade opens up on his fight with cancer | OneIndia Tamil

ஆஸ்திரேலிய அணி டி20 உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் மேத்தீவ் வேட்.

இன்று ஆஸ்திரேலியாவின் ஹீரோவாக பார்க்கப்படும் வேட், தனது கடந்த கால வாழ்க்கை குறித்து உணர்ச்சிவசமாக பேசியுள்ளார்.

15 வயதில் கலக்கல்

15 வயதில் கலக்கல்

விளையாட்டு என்றால் சிறு வயதில் இருந்து ஆர்வம். கிரிக்கெட்டா? இல்லை கால்பந்தா ? என்ற குழப்பம் எனக்குள் இருந்தது. ஆனால் 15 வயதில் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சதம் விளாசினேன். அப்போது தான் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் அப்போது என் வாழ்க்கையே புரட்டி போட்ட சம்பவம் நிகழ்ந்தது

புற்றுநோய் பாதிப்பு

புற்றுநோய் பாதிப்பு

16 வயதில் தனக்கு புற்றுநோய் இருந்தது தெரியவந்தது. வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பே, முடிந்துவிடும் என்ற நிலையில் இருந்தேன். ஆனால் ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டதால், தொடர் சிகிச்சை பெற்றேன். சிகிச்சையில் இருக்கும் போது தனது உடலில் பல மாற்றங்கள் இருந்தன. அப்போது தனது குடும்பத்தினர், நண்பர்கள் தான் துணை நின்றனர்

உதவியது கிரிக்கெட்

உதவியது கிரிக்கெட்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தன்னை கரை சேர்த்தது கிரிக்கெட் தான். கிரிக்கெட் தனக்கு எப்படி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். வீழ்ந்தால் எப்படி எழ வேண்டும் என்று கற்று கொடுத்தது. கிரிக்கெட்டில் அதீத கவனம் செலுத்திய பின்பு தான், என் வாழ்க்கையின் கடின காலத்தை மீண்டு வந்தேன்

சாம்பியன்

சாம்பியன்

33 வயதான மேத்தீவ் வேட் தற்போது பிக் பேஷ் லீக் தொடரில் கலக்கி வருகிறார், டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் விளையாடியது அந்த தொடரில் பெரும் திருப்புமுணையாக அமைந்தது. மேத்தீவ் வேட்டின் கதை வார்க்கையில் கஷ்டப்படுபவர்களுக்கு நல்ல ஊக்கத்தை தரும்.

இதே போன்று கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் குணமடைந்து, இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, December 22, 2021, 12:40 [IST]
Other articles published on Dec 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+