Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிறையில் 130 நாட்களாக வாடும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்.. பெண்ணை தாக்கிய வழக்கில் கைது

சென்னை : பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் 25 வழக்குகளில் சிக்கி தற்போது 13 நாட்களாக சிறையில் வாடி வருகிறார். ஆஸ்திரேலிய அணிக்காக 74 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5312 ரன்களை மைக்கில் ஸ்லேட்டர் குவித்திருக்கிறார்.இதில் 14 சதம் அடங்கும்.

இதேபோன்று ஆஸ்திரேலியாவுக்காக 42 சர்வதேச ஒரு நாள் போட்டியில் விளையாடிய மைக்கேல் சிலேட்டர், கடந்த 2004 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.

cricket

இந்த நிலையில் மைக்கேல் ஸ்லேட்டர் பெண்ணை கழுத்தை நெரித்து தாக்கியது, ஆபாசமான மெசேஜ்களை அனுப்புவது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது 25 வழக்குகள் உள்ளன. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட மைக்கேல் ஸ்டேட்டர் கடந்த நான்கு மாதங்களாக சிறையில் உள்ளார்.

இந்த நிலையில் தமக்கு ஜாமின் வழங்க வேண்டும் என மைக்கேல் ஸ்லேட்டர் பலமுறை நீதிமன்றத்தை நாடி இருக்கிறார் என்ற நிலையில் அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் வேண்டி மைக்கேல் ஸ்லேட்டர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி ப்ரீபர்ன், மைக்கேல் ஸ்லேட்டர் மீது பல தீவிரமான வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.

cricket

அவர் மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அவர் வெளியில் இருந்தால் நிச்சயம் அது பலருக்கு ஆபத்தைத் தான் கொடுக்கும். மைக்கேல் ஸ்லேட்டரின் நிலையை கருதி அவருக்கு மனதத்துவ சிகிச்சை வழங்கி அவர் சரியாகி விட்டார் என்று மருத்துவர் சான்றிதழ் வழங்கிய பின் ஜாமீன் வழங்க முன் வருவதாக நீதிபதி பிரிபர்ன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட ஸ்லேட்டர் தனது கையால் தலையை மூடிக்கொண்டு இருந்த நிலையில் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். இதை அடுத்து சிறை காவலர்கள் அவரை தூக்கி கொண்டு சென்றனர்.

Story first published: Tuesday, August 20, 2024, 17:37 [IST]
Other articles published on Aug 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+