Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லிஃப்டில் சிக்கி கொண்ட ஆஸி. வீரர் ஸ்மித்… சிட்னி ஹோட்டலில் பரபரப்பு..!!

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித்துக்கு 2021ல் இப்படி முடிந்திருக்க வேண்டியது இல்லை.

இனி கேப்டனாகவே முடியாது என்று கருதப்பட்ட நிலையில், ஸ்மித் மீண்டும் ஒரு போட்டிக்கு கேப்டனாக செயல்பட்டார்.

மேலும் அணியின் துணை கேப்டன் பதவியும் ஸ்மித்தை தேடி வந்தது.

சிட்னி கொண்டாட்டம்

சிட்னி கொண்டாட்டம்

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அடிலெய்ட் டெஸ்டில் 93 ரன்கள் எடுத்தார் ஸ்மித். நல்ல பார்மில் இருந்து வரும் நிலையில் ஆஷஸ் டெஸ்ட் கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றது. இதனால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த ஸ்மித், புத்தாண்டை உற்சாகமாக கொண்டாட தன்னுடைய அணி வீரர்களுடனும் குடும்பத்தினருடனும் சிட்னிக்கு சென்று இருந்தார்

லிஃப்டில் ஸ்மித்

லிஃப்டில் ஸ்மித்

புத்தாண்டை கொண்டாட சென்ற அவருக்கு, அங்கு தான் அதிர்ச்சி காத்திருந்தது. ஹோட்டலில் தங்கிய அவர் அங்கிருந்த லிஃப்டை பயன்படுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக லிஃப்ட் பழுதாகி பாதியில் நிற்க, லிஃப்ட்டினுள் ஸ்மித் மாட்டிக் கொண்டார்.

வீரர்கள் பதற்றம்

வீரர்கள் பதற்றம்

ஸ்மித் லிஃப்டில் சிக்கி கொண்ட சம்பவத்தை அடுத்து, ஹோட்டல் ஊழியர்கள், அணி நிர்வாகிகள் பதற்றம் அடைந்தனர். லிஃப்ட் கோளாறை சரி செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டது. லிஃப்டின் கதவை திறக்க முயற்சி எடுக்கப்பட்டது. இதனால் ஸ்மித் கொஞ்சம் அச்சப்பட, தொடங்கினார் சாவு பயத்த காட்டிடாங்க பரமா என்ற ரேஞ்ச்க்கு இல்லையென்றாலும் அவரது முகத்தில் படபடப்பு தெரிந்தது.

வீடியோ எடுத்த ஸ்மித்

வீடியோ எடுத்த ஸ்மித்

இதனையடுத்து தன்னை அமைதிப்படுத்தி கொள்ள ஸ்மித் தனது செல்போன் மூலம் லிப்டில் வீடியோ எடுக்க தொடங்கினார். லிஃப்டை சுற்றிக்காட்டிய ஸ்மித், இன்ஸ்டாகிராமில் எதோ ஃபில்டரை வைத்து விளையாடினார். அப்போது ஸ்மித்தின் நண்பரும் , சக வீரருமான மார்னஸ் லாபஸ்சேங் லிஃப்ட் கதவின் இடுக்கு வழியில் மிட்டாய்களை ஸ்மித்துக்கு வழங்கினார்.

55 நிமிட போராட்டம்

55 நிமிட போராட்டம்

இதனையடுத்து போக்கிரி விஜய் போல் லிஃப்டின் தரையில் ஸ்மித் உட்கார்ந்துவிட்டார். சுமார் 55 நிமிடத்திற்கு பிறகு லிஃப்டின் கதவு திறக்கப்பட்டது. லிஃப்டின் கதவு திறந்ததும் ஸ்மித் வெளியே வர அங்கிருந்தவர்கள் கைத்தட்டி வரவேற்றனர். இதனையடுத்த லிஃப்டில் சிக்கி கொண்ட தனது அனுபவத்தை ஸ்மித் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Story first published: Thursday, December 30, 2021, 20:24 [IST]
Other articles published on Dec 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+