சிட்னி: ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த மிக மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஒன்றாக, சிட்னியில் உள்ள புகழ்பெற்ற போண்டி கடற்கரையில் நிகழ்ந்தது. இதில் 15 பேர் கொல்லப்பட்டனர். யூதர்களின் பாரம்பரிய ஹனுக்கா திருவிழாவை கொண்டாடிக்கொண்டிருந்த மக்கள் மீது சாஜீத் அக்ரம் மற்றும் அவரது மகன் நவீத் ஆகியோர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
எனினும், தீவிரவாதிகள் துப்பாக்கியை பிடிங்கி, அல் அஹ்மது என்ற மற்றொரு இஸ்லாமியர் தடுத்து, காப்பாற்றினார். இந்தக் கோர சம்பவத்தைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய வீரர் உஸ்மான் கவாஜா குடும்பத்தினர் மீது சமூக வலைதளங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

கவாஜா மற்றும் அவரது மனைவி ரேச்சல் கவாஜா, தம்பதியரின் மகள்களையும் குறிவைத்த தரக்குறைவான கருத்துக்களின் ஸ்கிரீன்ஷாட்களைப் பகிர்ந்துள்ளார். அதில், கவாஜா பாகிஸ்தானை பூர்வீகத்தை கொண்டவர் என்பதால், அவரை பாகிஸ்தானுக்கு போ என்றும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
இது குறித்து பதிவிட்டுள்ள ரேச்சல் கவாஜா, "இத்தகைய கருத்துக்கள் புதிதல்ல, ஆனால் தற்போது அவை மேலும் மோசமடைந்துள்ளன," என்று குறிப்பிட்டார். எங்கள் மகள்களை எதிர்கால தீவிரவாதிகள், புற்றுநோய் ரத்தம்' என பதிவிடுகின்றனர். பாகிஸ்தானுக்கு 'திரும்பச் செல்லுமாறு கூறுகின்றனர்.
"எதிர்ப்பு மனநிலை, இஸ்லாமோபோபியா போன்ற இனவெறி என எதற்கும் நாம் துணை நிற்கக்கூடாது. முன்னெப்போதையும் விட இப்போது நாம் அனைவரும் ஒன்றுபட்டு, ஒற்றுமையுடன் இருப்பது அவசியம்," என்று வலியுறுத்தினார். முன்னதாக, உஸ்மான் கவாஜா இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்திருந்தார்.
இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட உஸ்மான், "போண்டி மற்றும் ஒட்டுமொத்த யூத சமூகத்திற்கு. எதிராக நிகழ்த்தப்பட்ட இது பயங்கரமான குற்றங்கள். இன்றைய செய்திகள் உண்மையிலேயே பேரழிவை ஏற்படுத்துகின்றன," என்று நொறுங்கிய இதய ஈமோஜியுடன் குறிப்பிட்டிருந்தார். "உயிர்கள் பறிபோயின, குடும்பங்கள் சிதறின. சமூகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. வார்த்தைகள் இல்லை.துயரம் மட்டுமே. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் என் பிரார்த்தனைகள்" என்றும் அவர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன் பாட் கம்மின்ஸ், இந்தத் துயரத்தால் மனம் நொறுங்கியதாகத் தெரிவித்து, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் யூத சமூகத்திற்கு ஆதரவு தெரிவித்தார். மேலும், இரத்தம் தானம் செய்யுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இருநாட்டு கிரிக்கெட் வீரர்களும் கையில் கருப்பு நிற பேட்ஜ் அணிந்து விளையாடினர்.