Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்று டுவென்டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி - யாருக்கு கப்?

பார்படாஸ்: டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பரம வைரிகளான இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.

அரை இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்தும், நடப்புச் சாம்பியன் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

பார்படாஸில், இந்திய நேரப்படி இன்று இரவு 9 மணிக்குத் தொடங்கும் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை செய்யவுள்ளன.

இரு அணிகளும் இதுவரை நான்கு போட்டிளில் மோதியுள்ளன. இதில் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், ஒரு போட்டியில் இங்கிலாந்தும் வென்றுள்ளன. ஒரு போட்டி முடிவேதும் இல்லாமல் போனது.

வலுவான பந்து வீச்சு மற்றும் பேட்டிங் வரிசையுடன் காணப்படுகிறது ஆஸ்திரேலியா. இந்தத் தொடரில் ஒரு போட்டியில் கூட அது தோல்வி அடையவில்லை.

இங்கிலாந்தும் கிட்டத்தட்ட நல்ல பலத்துடன் காணப்படும் அணியாகவே உள்ளது. கெவின் பீட்டர்சன், பால் காலிங்வுட் ஆகியோர் பலம் சேர்க்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவைப் பொறுத்தமட்டில், டிர்க் நேன்ஸ், ஷான் டெய்ட், ஷான் வாட்சன், டேவிட் வார்னர், கேமரூன் ஒயிட், மைக்கேல் ஹஸ்ஸி ஆகியோர் பயமுறுத்தும்படி ஆடி வருகிறார்கள்.

ஆஸ்திரேலியாவை கோப்பையை வெல்லும் என பலரும் கணித்துள்ளனர். அதேசமயம், இங்கிலாந்தை முழுமையாக புறக்கணித்து விட முடியாத நிலையும் உள்ளதால் இன்றைய இறுதிப் போட்டி படு விறுவிறுப்பாக இருக்கும் என்று நம்பலாம்.

Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+