Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிண்டல் செய்த இந்திய ரசிகர்கள்.. மைதானத்தில் அழுத ஆஸ்திரேலிய ரசிகர்.. ஆஸியின் தோல்வி எதனால்?

லக்னோ : உலக கிரிக்கெட்டில் பொருளாதாரம், பவர் ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால் இந்தியா தான் தாதா போல் செயல்பட்டு வரும். ஆனால் கிரிக்கெட் என்று களத்திற்கு வந்துவிட்டால் எப்போதுமே ஆஸ்திரேலியா தான் டாப் அணியாக விளங்கும்.

இதுவரை ஐந்து முறை ஐசிசி உலக கோப்பை பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா தற்போது உலக கோப்பையில் தொடர்ந்து நான்கு போட்டிகளில் முதல்முறையாக தோல்வியை தழுவி இருக்கிறது.

Aus vs SA

இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவிய நிலையில் நேற்று தென்னாபிரிக்காவிடம் 134 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய தோல்வி தழுவிய நிலையில் மைதானத்தில் வந்து போட்டியை பார்த்த அந்நாட்டு ரசிகர்களை இந்திய ரசிகர்கள் கிண்டல் செய்து ஓட்டினர். இதனால் மனமுடைந்த ஆஸ்திரேலியா ரசிகர் ஒருவர் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.

இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி எதனால் தோல்வியில் தழுவுகிறது என்பதை தற்போது பார்க்கலாம். கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் முதலில் இரண்டு விஷயம் அவசியம். நாம் எந்த மாதிரி விளையாடப் போகிறோம்? எந்த மைதானத்தில் எப்படி விளையாட போகிறோம் என்று இரண்டு காரணம் தான். இது தான் ஆட்டத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது.

இங்கிலாந்தை பொறுத்தவரையில் தாங்கள் அதிரடியாக ஆடப்போகிறோம் என்பதை முடிவெடுத்துக் கொண்டு விளையாடி வருகிறார்கள். ஆனால் ஆஸ்திரேலியாவில் அதிரடியாக விளையாடுவதா? இல்லை மெதுவாக விளையாடுவதா? என்று குழப்பத்தில் இருக்கிறார்கள். மேலும் ஆடுகளும் தோய்வாக இருக்கும் மைதானங்களில் அதிரடியாக விளையாடுகிறேன் என்ற பெயரில் தேவை இல்லாமல் பேட்டை சுற்றி ஆட்டம் இழந்து விடுகிறார்கள்.

இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் களத்திற்கு ஏற்ப தங்களுடைய ஆட்ட ஸ்டைலை மாற்றிக் கொண்டால் மட்டுமே வெற்றி பாதைக்கு திரும்ப முடியும். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் நிச்சயம் எந்த குறையும் இல்லை. ஆனால் பேட்ஸ்மேன்கள் தங்களுடைய பேட்டிங் ஸ்டைலை மட்டும் களத்துக்கு ஏற்ப முன்கூட்டியே தெரிந்து கொண்டால் ஆஸ்திஎ அணி நிச்சயம் வெற்றி பாதைக்கு திரும்பும்.

Story first published: Friday, October 13, 2023, 2:50 [IST]
Other articles published on Oct 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+