ரொம்ப மோசம் அவர்.. ஏமாற்றி விளையாடுகிறார்.. பண்ட்டை சீண்டும் ஆஸி. ரசிகர்கள்.. என்ன நடந்தது?
சிட்னி: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பண்ட் ஏமாற்றி விளையாடுகிறார் என்று ஆஸ்திரேலியா ரசிகர்கள் அவருக்கு எதிராக விமர்சனம் வைத்துள்ளனர்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வென்றுள்ள நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
இன்று நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிதான் பெரும்பாலான ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தியது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டிற்கு 166 ரன்கள் எடுத்துள்ளது.

பண்ட்
இன்று நடந்த போட்டியில் இந்திய அணியின் கீப்பர் ரிஷாப் பண்ட் இரண்டு முறை கேட்ச் விட்டது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது. அஸ்வின் ஓவரில் புக்கோவஸ்கி கொடுத்த கேட்சை பண்ட் தவறவிட்டார். அப்போதே பண்ட் இதை கேட்ச் பிடித்து இருந்தால் புக்கோவஸ்கி அரை சதம் அடித்திருக்க மாட்டார்.

எப்படி
ஆனால் இன்று பண்ட் முக்கியமான வேறு விஷயத்திற்காக விமர்சனம் செய்யப்பட்டார். சிராஜ் ஓவரில் புக்கோவஸ்கி அடித்த பந்தை பண்ட் கேட்ச் பிடித்தார். ஆனால் இதை உண்மையில் பண்ட் கேட்ச் பிடிக்கவில்லை . இவர் பந்தை பிடிக்கும் போதே, அதை கீழே தவறவிட்டார்.

சரியாக பிடிக்கவில்லை
பந்து தரையில் படும்படிதான் பண்ட் அதை பிடித்தார். ஆனால் கேட்சை பிடித்துவிட்டது போல இவர் செயல்பட்டார். இதனால் லெக் அம்பயரும் விக்கெட் என்று சாஃப்ட் சிக்னல் கொடுத்தார். அதோடு மூன்றாவது நடுவரிடம் நடுவர் சோதனை செய்தார். அதில் பண்ட் கேட்ச் பிடிக்கவில்லை என்பது உறுதியானது.

கீழே இல்லை
பந்தை பிடிக்கும் போது, அது கீழே பட்டுவிட்டது உறுதியானது. ஆனால் பண்ட் இதை முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை. இந்த நிலையில் பண்ட் இப்படி செயல்பட்டு இருக்க கூடாது, அவர் ஏமாற்ற பார்க்கிறார் என்று அவருக்கு எதிராக விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.

மோசம்
பண்ட் ஏமாற்றி விளையாடுகிறார் என்று ஆஸ்திரேலியா ரசிகர்கள் அவருக்கு எதிராக விமர்சனம் வைத்துள்ளனர். அதே சமயம் பண்ட் இந்த விக்கெட்டை கொண்டாடவில்லை. அவருக்கே சந்தேகம் இருந்தது. அவருக்கும் தான் கேட்ச் பிடித்தோமா என்று சந்தேகம்தான் என்று இந்திய ரசிகர்கள் ஆதரவாக பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications