Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தில்லாலங்கடி வேலை செய்யும் ஆஸ்திரேலியா.. ஐசிசி விதியிலிருந்து தப்பிக்க பலே ஏற்பாடு.. ஃபாலோ செய்யுங்க

மெல்போர்ன் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஐசிசி அறிவித்துள்ள ஒரு தண்டனையிலிருந்து தப்பிக்க ஆஸ்திரேலிய அணி தில்லாலங்கடி வேலை ஒன்றை செய்துள்ளது.

அதாவது டி20 போட்டிகள் 3 மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்பதற்காக ஐசிசி பல்வேறு நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதன்படி வீரர்கள் ஃபில்டிங்கை செட் செய்வதற்காக அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றனர் என்று புகார் எழுந்துள்ளது. இதனை தடுப்பதற்காக குறிப்பிட்ட நேரத்திற்குள் 19 ஓவரை வீசி இருக்க வேண்டும்.

விதியால் ஆபத்து

விதியால் ஆபத்து

இல்லையெனில் பவுண்டரி லைனில் ஐந்து ஃபில்டர்களுக்கு பதிலாக நான்கு ஃபில்டர்கள் மட்டுமே நிறுத்த வேண்டும் என்ற புதிய விதி ஒன்றை ஐசிசி அறிவித்துள்ளது. இதன் மூலம் பந்து வீச வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டால் ஆட்டத்தின் இருபதாவது ஓவரில் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும்.இந்த விதியால் ஏற்கனவே ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் அடி வாங்கி இருக்கிறது.

நேரம் செலவாகும்

நேரம் செலவாகும்

கடைசி ஓவரில் பவுண்டரி லைனில் நான்கு ஃபில்டர்கள் மட்டும் நின்றால் பேட்ஸ்மேன்களுக்கு அது கூடுதல் சாதமாகி விடும். இந்த நிலையில் இதனை தடுக்க ஆஸ்திரேலியா புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. அதன்படி ஃபில்டிங் செய்யும் போது பேட்ஸ்மேன்கள் பந்தை பவுண்டரிக்கு அடித்தால் வீரர்கள் பந்தை ஓடி சென்று எடுத்து வந்து அடுத்த பந்து வீசுவதற்குள் நேரம் செலவாகும் .

ஆஸி. திட்டம்

ஆஸி. திட்டம்

இதனை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலியா அணி பிளேயிங் லெவனில் இல்லாத வீரர்களை பவுண்டரி லைனுக்கு வெளியே நிற்க வைக்கிறது. அதன்படி பந்து பவுண்டரியை தொடும்போது அந்த வீரர்களே பந்தை எடுத்து கொடுத்து விடுவார்கள். இதன் மூலம் ஒவ்வொரு பந்திலும் 20 முதல் 30 வினாடிகள் சேமிக்கப்படுகிறது. இதனை இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி பயன்படுத்தியது.

நேரம் வீணாகாது

நேரம் வீணாகாது

இது குறித்து பேசிய ஆஸ்டன் ஏகார், ஒவ்வொரு முறையும் பவர்பிளேவில் பந்துகளை எடுக்க ஃபில்டர்கள் ஓடும்போது நேரம் செலவாகிறது. இதனை கருத்தில் கொண்டு நாங்கள் அணியில் இடம் பெறாத வீரர்களை பவுண்டரி லைனில் நிற்க வைத்தோம். இதன் மூலம் நேரம் செலவாகுவதை தடுக்க முடியும். இது போன்ற முயற்சிகளை செய்தால் தான் என்ன பலன் கிடைக்கிறது என்று பார்க்க முடியும் என்று ஏகார் கூறியுள்ளார்.

ஃபாலோ செய்யுமா இந்தியா

ஃபாலோ செய்யுமா இந்தியா

ஆஸ்திரேலிய அணியின் இந்த யுக்தி பலராலும் பாராட்டப்படுகிறது. டி20 உலக கோப்பையில் இந்தியா உள்ளிட்ட மற்ற அணிகளும் இதனை பின்பற்ற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர். ஆஸ்திரேலிய அணி இப்படி வித்தியாசமாக யோசிப்பதால் தான் அவர்கள் தொடர்ந்து சாம்பியன் ஆக இருக்கிறார்கள் என்றும் ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

Story first published: Friday, October 21, 2022, 15:06 [IST]
Other articles published on Oct 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+