Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மொகாலியில் இன்று 4வது ஒருநாள் போட்டி… தோனி இல்லை.. தொடரை வெல்லுமா இந்தியா?

Recommended Video

இன்று 4 வது ஒருநாள் போட்டி... தொடரை வெல்லுமா இந்தியா

சண்டிகர்: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4வது ஒருநாள் போட்டி மிகுந்த பரபரப்புகளுக்கு இடையில் இன்று மொகாலியில் நடைபெற உள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 2 டி20, 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. டி20 தொடரை 2-0 கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. ஹைதராபாத்தில் முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், நாக்பூர் 2வது போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

நேற்று முன்தினம் 3வது ராஞ்சியில் நடைப்பெற்ற போட்டியில் தொடரை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கியது. அதனால் முதல் 2 போட்டிகளில் விளையாடிய அதே வீரர்கள் களம் கண்டனர். ஆனால் கேப்டன் கோலியை தவிர மற்றவர்கள் நன்றாக விளையாடவில்லை.

மொகாலி போட்டி

மொகாலி போட்டி

அதனால் ஆஸ்திரேலியா 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆனாலும் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. எனவே இன்று மொகாலியில் நடைபெறும் 4வது போட்டியில் களமிறங்கும் இந்திய அணியில் கட்டாயம் மாற்றமிருக்கும்.

ராகுல் சேர்ப்பு?

ராகுல் சேர்ப்பு?

தொடர்ந்து சரியாக விளையாடாத ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு ஆகியோர் நீக்கப்படலாம். அதற்கு பதில் லோகேஷ் ராகுல் சேர்க்கப்படலாம். டோனிக்கு 4, 5வது ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அவருக்கு பதில் ரிஷப் பண்ட் விளையாடுவார்.

சாஹலுக்கு வாய்ப்பு

சாஹலுக்கு வாய்ப்பு

அதேபோல் பந்து வீச்சாளர்களில் புவனேஷ்வர் குமார், யஜ்வேந்திர சாஹல் ஆகியோர் அணியில் இடம் கிடைத்தும் ஆடும் அணியில் இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்களுக்காக ரவீந்திர ஜடேஜா, முகம்மது சமி, கேதர் ஜாதவ் ஆகியோரில் யார் வெளியில் உட்கார போகிறார்கள் என்று இன்று தெரியும்.

பார்முக்கு வந்த பின்ச்

பார்முக்கு வந்த பின்ச்

ஆஸ்திரேலியாவில் கேப்டன் ஆரோன் பின்ச் பார்முக்கு திரும்பியிருப்பது அணிக்கு வலு சேர்க்கும். பந்து வீச்சில் கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், ஆடம் சம்பா உள்ளிட்டோர் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

கட்டாய வெற்றி

கட்டாய வெற்றி

தொடரை இழக்காமல் இருக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அதனால் அந்த அணி வீரர்கள் எல்லா வகையிலும் இந்தியாவை எதிர்கொள்ள வியூகங்களை வகுப்பார்கள்.

Story first published: Sunday, March 10, 2019, 9:45 [IST]
Other articles published on Mar 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+