Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐயோ போச்சே.. புலம்பும் பாகிஸ்தான்.. டிராவிடை கண் முன் காட்டிய ஆஸ்திரேலியா

துபாய் : "டெஸ்ட் போட்டின்னா இதுதான்ப்பா" என நீண்ட நாட்கள் கழித்து சொல்ல வைத்துள்ளது, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் இடையே நடந்த துபாய் டெஸ்ட்.

முழுதாக ஐந்து நாட்களும் நடந்த இந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதில் ஆஸ்திரேலியா ஆடிய விதம் நீண்ட நாட்களுக்கு நினைவு கூறும் வகையில் அமைந்தது.

பாகிஸ்தான் மூன்று இன்னிங்க்ஸ்களில் ஆதிக்கம் செலுத்தியும், போட்டியின் கடைசி இன்னிங்க்ஸில் கோட்டை விட்டு வெற்றியை நழுவவிட்டது.

பாகிஸ்தான் சூப்பர் பேட்டிங்

பாகிஸ்தான் சூப்பர் பேட்டிங்

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் இடையே நடந்து வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி துபாயில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 482 ரன்கள் எடுத்தது, அந்த அணியின் ஹபீஸ் 126, ஹாரிஸ் சொஹைல் 110, இமாம் 76, ஆசாத் ஷபிக் 80 ரன்கள் குவித்தனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சு எந்த வகையிலும் எடுபடவில்லை.

பாகிஸ்தான் போட்ட திட்டம்

பாகிஸ்தான் போட்ட திட்டம்

அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் பின்ச் மற்றும் கவாஜா நல்ல துவக்கம் அளித்தனர். இவர்கள் இருவரும் இணைந்து 142 ரன்கள் குவித்தனர். கவாஜா 85, பின்ச் 62 ரன்களும் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சேர்த்தே 42 ரன்கள் தான் எடுத்தனர். ஆஸ்திரேலியா 202 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 280 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான், ஃபாலோ ஆன் கொடுக்காமல், பெரிய இலக்கை நிர்ணயித்து ஆஸ்திரேலியாவுக்கு "தண்ணி" காட்டலாம் என தப்புக் கணக்கு போட்டது. பாகிஸ்தான் அணி நான்காம் நாள் பாதி வரை ஆடிய பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.

கவாஜா - ஹெட் இணை

கவாஜா - ஹெட் இணை

482 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா அணி 87 ரன்களுக்கு அடுத்தடுத்து 3 விக்கெட்களை இழந்து அதிர்ச்சி அளித்தது. அடுத்த துவக்க வீரர் கவாஜா மற்றும் ஹெட் இணைந்து டிராவிட் போல கட்டை போட துவங்கினர். இவர்கள் இருவரும் 292 பந்துகள் சந்தித்து 132 ரன்கள் எடுத்தனர். ஹெட் 175 பந்துகள் சந்தித்து 72 ரன்களில் வெளியேறினார். அடுத்து ஒரு விக்கெட்டும் விரைவாக விழ, ஆஸ்திரேலியா தாக்குப்பிடிக்குமா என்ற சந்தேகம் இருந்தது.

கட்டை போட்ட கேப்டன்

கட்டை போட்ட கேப்டன்

அப்போது வந்த கேப்டன் பெய்ன், கவாஜா இணைந்து மிக மோசமாக "கட்டை" போட்டனர். ரன் எடுப்பதை பற்றி இருவரும் கவலைபடவில்லை. ஒரு கட்டத்தில் கவாஜா 302 பந்துகள் சந்தித்து வெளியேறினார். அடுத்து கேப்டன் பெய்ன் 9வது விக்கெட்டுக்கு வந்த லியோனுடன் இணைந்து போட்டியை டிரா செய்தார். பெய்ன் 194 பந்துகள் சந்தித்து 61 எடுத்து இருந்தார். 139.5 ஓவர்களில் 362 ரன்கள் எடுத்து, 8 விக்கெட்கள் இழந்து இருந்தது ஆஸ்திரேலியா. பாகிஸ்தான் போட்ட கணக்கு தப்பாகி போனதால் வெற்றியை கோட்டை விட்டது அந்த அணி.

Story first published: Friday, October 12, 2018, 11:42 [IST]
Other articles published on Oct 12, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+