Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை: ஐசிசி தொடர்களில் முதல் சுற்றிலேயே ஆஸ்திரேலியா வெளியேறிய முழு விவரம்

சிட்னி: சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக உலக கோப்பைகளை வென்ற அணி என்றால் அது ஆஸ்திரேலியா தான். இதுவரை 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முடிசூடா மன்னனாக விளங்கும் ஆஸ்திரேலியா, ஆறு முறை கோப்பையை வென்றிருக்கிறது.

தற்போது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக விளங்கும் ஆஸ்திரேலியாவுக்கு t20 உலக கோப்பை போட்டிகள் பெரும் அளவு கை கொடுக்கவில்லை. ஏனென்றால் கண் இமைக்கும் நேரத்தில் போட்டிகள் முடிந்துவிடும் என்பதால் விட்டுப் பிடித்து விளையாடும் போக்கை ஆஸ்திரேலியாவால் இந்த பார்மட்டில் செயல்படுத்த முடிவதில்லை.

இதன் காரணமாக தான் ஆஸ்திரேலிய அணி t20 உலக கோப்பையை பொருத்தவரை 2021 ஆம் ஆண்டு ஒரே ஒருமுறை மட்டும் தான் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. இந்த சூழலில் தற்போது நடைபெற்று வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி சாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது முதல் சுற்றிலே வெளியேறி இருக்கிறது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி மற்றும் இலங்கைக்கு எதிராக எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி என முடிவுகள் ஆஸ்திரேலியாவுக்கு பாதகமாக அமைந்தது. மேலும் ஜிம்பாப்பே அணி அயர்லாந்துடன் மோதி இருந்த ஆட்டம் மழையால் ரத்தானதால், ஜிம்பாப்வேக்கு கூடுதலாக ஒரு புள்ளிகள் கிடைத்தது.

இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி வெளியேறியிருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியா டி20 உலக கோப்பையில் முதல் சுற்று இருந்து வெளியேறியது இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே 2009 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவின் முதல் சுற்றிலிருந்து வெளியேறி இருக்கிறது.

லீக் சுற்றில் பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக ஆஸ்திரேலியா தோல்வியை தழுவிய நிலையில் முதல் சுற்றிலே வெளியேறி இருக்கிறது. இதேபோன்று 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆறு கோப்பையை வென்றாலும், அதிலும் மூன்று முறை அவர்கள் முதல் சுற்றிலேயே வெளியேறி இருக்கிறார்கள்.

1979 ஆம் ஆண்டு 1983 ஆம் ஆண்டு மற்றும் 1992 ஆம் ஆண்டு ஆகிய தொடரில் முதல் சுற்றில் ஆஸ்திரேலியா வெளியேறி இருக்கிறது. இதேபோன்று சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி 2013 மற்றும் 2017 ஆம் ஆண்டு குரூப் சுற்றில் வெளியேறி இருக்கிறது. அந்த தொடரில் ஆஸ்திரேலியா விளையாடிய போட்டிகள் பெரும்பாலும் மழையால் ரத்ததான நிலையில் தொடரை விட்டு முதல் சுற்றிலேயே வெளியேறி இருக்கிறது.

Story first published: Tuesday, February 17, 2026, 18:35 [IST]
Other articles published on Feb 17, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+