Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“வீரர்களுக்கு கொடுமை.. மூட் ஸ்விங் பிரச்சினை” ஆஸி, கோச் ஜஸ்டின் லேங்கர் திடீர் ராஜினாமா.. பின்னணி!!

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டீன் லேங்கர் திடீரென பதவி விலகியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை 4 - 0 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அசத்தியது.

இதன் மூலம் உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணி என்ற பெயருடன் ஆஸ்திரேலியா வலம் வரும் வேளையில் வெற்றிகரமான பயிற்சியாளர் திடீரென இந்த முடிவை எடுத்துள்ளார். அதுவும் வீரர்களுடனான கருத்து மோதல் தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

அவசர ஆலோசனை

அவசர ஆலோசனை

51 வயதாகும் ஜஸ்டின் லேங்கரின் பதவிக்காலம் ஜூன் மாதம் வரை உள்ளது. ஆனால நேற்று இரவு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாக குழுவினருடன் அவர் திடீர் சந்திப்பு நடத்தியுள்ளார். அப்போது அவரிடன் பதவிக்காலத்தை நீட்டிக்கிறோம் எனக் கூறியதாகவும், ஆனால் அதற்கு லேங்கர் மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் தெரிறது. நீண்ட நேரமாக நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில் லேங்கர் பதவியை ராஜினாமா செய்வதாக இறுதி முடிவை எடுத்துள்ளார்.

அதிகப்படியான டென்ஷன்

அதிகப்படியான டென்ஷன்

லேங்கருக்கு மூட் ஸ்விங் பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. அதாவது அடிக்கடி கோபம் ஏற்படுவது, சரியான சாந்த நிலை இல்லாமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக வீரர்களுக்கு வேண்டுமென்றே கடும் பயிற்சிகளை வழங்கி வாந்தி எடுக்கும் சூழல்கள் உருவாகியுள்ளன. கடந்த 2020ம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் குறித்து அமேசான் நிறுவனம் ஆவணப்படம் எடுத்துள்ளது. அதில் ஜஸ்டின் லேங்கரை விட மற்ற வீரர்கள் அனைவரும் 40,000 டாலர்கள் வரை கூடுதல் சம்பளம் பெற்றுள்ளனர்.

கொடுமைகள்?

கொடுமைகள்?

இதனை அறிந்த லேங்கர், தன்னிடம் மறைத்து இதனை செய்ததாக கோபத்தில் இருந்துள்ளார். இதனால் வீரர்களிடம் வேண்டுமென்றே கடுமையாக நடந்துக்கொண்டதாகவும், கடும் பயிற்சி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சமயத்தில் வீரர்கள் சிலருக்கு உடல்நிலையில் சரியில்லாமல் வாந்தி எடுத்துள்ளனர். இப்படி அவர் மீது வீரர்கள் பல்வேறு புகார்களை அடுக்கியுள்ளனர்.

 கடின உழைப்பு

கடின உழைப்பு

கடந்த 2018ம் ஆண்டில் பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து டேரன் லக்மேன் நீக்கப்பட்டார். இக்கட்டான சூழலில் ஜஸ்டின் லேங்கர் பதவியேற்றார். ஆனால் பல்வேறு வெற்றிகளை ஆஸ்திரேலிய அணிக்கு அவர் பெற்றுக்கொடுத்துள்ளார்.

உலகக்கோப்பை வெற்றி

உலகக்கோப்பை வெற்றி

2019ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதி வரை சென்று அசத்தியது. அதில தவறவிட்ட சாம்பியன் பட்டத்தை 2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இது ஆஸ்திரேலியாவின் முதல் டி20 உலகக்கோப்பை வெற்றியாகும். இதுமட்டுமல்லாம், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து என அவரின் பயிற்சியில் பல வரலாற்று வெற்றிகள் கிடைத்தன.

அடுத்த ப்ளான்

அடுத்த ப்ளான்

ஆஸ்திரேலிய அணியை தற்போது டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக மாற்றி வைத்துள்ள லேங்கர் பதவியை ராஜினாமா செய்வது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. லேங்கர் அடுத்ததாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு பயிற்சியாளராக செல்லவுள்ளதாகவும் தெரிகிறது. சமீபத்தில் தான் இங்கிலாந்து பயிற்சியாளர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, February 5, 2022, 13:45 [IST]
Other articles published on Feb 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+