Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - ஆஸ்திரேலியா.. அடுத்த அதிரடி சரவெடி... 3 டி20 போட்டிகள்.. முட்டி மோத இரு தரப்பும் ரெடி!

அடிலைட்: ஒரு நாள் போட்டித் தொடர் முடிந்து விட்ட நிலையில் அடுத்து இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் டுவென்டி 20 தொடருக்குத் தயாராகி விட்டன. 3 போட்டிகள் கொண் தொடரிலாவது இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பில் இந்தியர்கள் உள்ளனர்.

அதேசமயம் ஒரு நாள் தொடரில் இந்தியாவை 5-0 என்ற கணக்கில் வெள்ளையடிக்க நினைத்து அது முடியாமல் போன ஏமாற்றத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா, டுவென்டி 20 தொடரில் அதைச் சாதிக்க வேகமாக உள்ளது.

ஆனால் இந்த தொடரிலாவது ஆஸ்திரேலியாவுக்கு கடும் நெருக்கடி தர வேண்டும் என்ற வேகத்தில் இந்தியா உள்ளது. வழக்கம் போல இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்ற போதும், பவுலர்கள் எப்படி ஆஸ்திரேலியாவை அடக்கப் போகிறார்கள் என்பதுதான் பயம் கலந்த எதிர்பார்ப்பாக உள்ளது.

உலகக் கோப்பைப் போட்டிக்கு டிரெய்லர்

உலகக் கோப்பைப் போட்டிக்கு டிரெய்லர்

மார்ச் - ஏப்ரலில் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை டுவென்டி 20 தொடருக்கான நல்ல பயிற்சியாக இதை இரு அணிகளும் பார்க்கின்றன.

நாளை முதல் போட்டி

நாளை முதல் போட்டி

நாளை முதல் டுவென்டி 20 போட்டி அடிலைடில் நடக்கிறது. இதற்கு இரு அணிகளும் தயாராகி விட்டன. டோணி தலைமையில் இந்திய அணி களம் இறங்குகிறது.

பின்ச் தலைமையில் ஆஸ்திரேலியா

பின்ச் தலைமையில் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணி ஆரோன் பின்ச் தலைமையில் களம் குதிக்கிறது. டுவென்டி 20 ஸ்பெஷலிஸ்ட்டுகளுடன் இரு அணிகளும் மோதலில் இறங்குகின்றன என்பதால் பட்டாசுக்குக் குறைவிருக்காது.

சரவெடி அதிரடி

சரவெடி அதிரடி

ஒரு நாள் போட்டி போல நிச்சயம் இந்த டுவென்டி 20 தொடர் இருக்காது என்பது உறுதி. கோஹ்லி இந்தத் தொடரில் ஏற்கனவே செம காட்டு காட்டியுள்ளார். டுவென்டி 20 தொடரில் அவர் அதிரிபுதிரியாக ஆடினால் ஆஸ்திரேலியாவுக்கு கண்டம் கன்பர்ம்ட்!

நம்பர் ஒன் ஆகலாம்

நம்பர் ஒன் ஆகலாம்

இந்தத் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்றால் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கலாம். அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் களம் காணும் இந்தியா இதைச் சாதிக்குமா என்பது எதிர்பார்ப்புக்குரியது.

"பழங்களின்" வருகை

இந்திய அணிக்கு ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், ஆசிஷ் நெஹ்ரா போன்ற அனுபவம் வாய்ந்த பழம்பெரும் வீரர்கள் வந்துள்ளனர். சுரேஷ் ரெய்னாவும் வந்துள்ளார். ஹர்டிக் பாண்டேவும் வந்துள்ளார்.

எப்பப்ப எங்கெங்கே

எப்பப்ப எங்கெங்கே

முதல் போட்டி நாளை அடிலைடில் பிற்பகல் (நம்ம ஊர் நேரப்படி) 2.08 மணிக்குத் தொடங்குகிறது. 2வது போட்டி ஜனவரி 29ம் தேதி மெல்போர்னில் நடைபெறும். 3வது போட்டி ஜனவரி 31ம் தேதி சிட்னியில் நடக்கும்.

அணிகள்

அணிகள்

ஆஸ்திரேலியா - பின்ச், ஸ்காட் போலன்ட், காமரூன் பாய்ஸ், ஜேம்ஸ் பால்க்னர், ஜான் ஹேஸ்டிங்ஸ், டிராவிஸ் ஹெட், நதன் லியோன், கிறிஸ் லின், மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ், கனே ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், ஷான் டெய்ட், ஆண்ட்ரூ டை, மாத்யூ வாட், டேவிட் வார்னர், ஷான் வாட்சன்.

இந்தியா : டோணி, ரோஹித் சர்மா, தவான், கோஹ்லி, ரஹானே, யுவராஜ் சிங், குர்கீரத் சிங், ரெய்னா, பாண்ட்யா, ரிஷி தவான், ஜடேஜா, அஸ்வின், ஹர்பஜன் சிங், நெஹ்ரா, உமேஷ் யாதவ், பும்ரா.

Story first published: Monday, January 25, 2016, 15:45 [IST]
Other articles published on Jan 25, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+