Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொஞ்சமாவது அறிவை பயன்படுத்துங்கள்.. ஆர்ஸ்தீப் சிங், உம்ரான் மாலிக்கிற்கு பிரட்லீ அறிவுரை

சிட்னி : இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எதிர்காலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பிரேட்லி அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் இருந்தாலும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 306 எண்கள் என்ற இலக்கை கூட தற்காத்துக் கொள்ள முடியவில்லை.

இது குறித்து தனது youtube சேனலில் பேசி உள்ள பிரட்லி இந்திய வீரர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அவர் கூறியதாவது, திறமையான இளம் வீரர்களை எப்படி கையாள வேண்டும் என பல அணிகளுக்கு தெரிவதில்லை.

நம்புகிறேன்

நம்புகிறேன்

நாம் டிவியில் பார்த்திருப்போம், இளம் வீரர்கள் பந்து வீசும் போது நிறைய வீரர்கள் அவர்களுக்கு அறிவுரை வழங்குவார்கள். நான் சொல்லிக் கொள்வதெல்லாம் டிராவிட்டும், ரோகித் சர்மாவும் ஆர்ஸ்தீப் சிங் போன்ற பந்துவீச்சாளர்களுக்கு அளவுக்கு மீறிய அறிவுரையிலிருந்து தடுக்க வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டில் ஏதோ சில போட்டிகளில் விளையாடிருக்கிறேன். அதனால் அவர்களுக்கு என்னுடைய எண்ணங்களை கூற விரும்புகிறேன். நிச்சயம் அது ஆர்ஸ்தீப் சிங் மற்றும் உம்ரான் மாலிக் உதவும் என நம்புகிறேன்.

சிக்ஸ் பேக்ஸ் உதவாது

சிக்ஸ் பேக்ஸ் உதவாது

ஆர்ஸ்தீப் சிங்குக்கு என்னுடைய முதல் அறிவுரை, அவர் ஒல்லியாக இருப்பதால் ஜிம்முக்கு சென்று உடலை பெருக்க வேண்டும் என பலர் அவருக்கு அறிவுரை கூறியிருப்பார்கள். ஆனால் அதனை எல்லாம் செய்ய வேண்டாம். உடலை வலுப்படுத்துவது முக்கியம்தான், ஆனால் அதற்காக உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று அதிக அளவில் பயிற்சி செய்து உடலை வருத்திக் கொள்ளத் தேவையில்லை.வேகப்பந்துவீச்சாளர்கள் சிக்ஸ் பேக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.

சமூக வலைத்தளம் வேண்டாம்

சமூக வலைத்தளம் வேண்டாம்

அந்த சிக்ஸ் பேக்ஸ் எல்லாம் உங்களுக்கு வேகமாக பந்து வீச உதவாது. அதற்கு பதிலாக உங்களுடைய அறிவை பலப்படுத்துங்கள். இரண்டாவது முக்கிய அட்வைஸ் சமூக வலைத்தளத்தை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு விளையாட்டு வீரராக இருந்தால் உங்களுடைய நோட்டிபிகேஷன் ஐ ஆப் செய்து விடுங்கள். ரசிகர்கள் சொல்லும் கமெண்ட்ஸ்களை படிக்க வேண்டாம்.

உள்ளூர் போட்டிகள்

உள்ளூர் போட்டிகள்

ரசிகர்கள் சொல்வதை பிரித்துப் பார்க்க வேண்டிய அறிவும் ,காமன்சென்சும் கொஞ்சமாவது இருக்க வேண்டும். உங்களுக்கு சமூக வலைத்தளம் பிடிக்கவில்லை என்றால் தயவு செய்து அதிலிருந்து வெளியேறி விட்டு கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உங்களுடைய பந்துவீச்சு திறனை வளர்க்க உள்நாட்டு கிரிக்கெட் போட்டியை பயன்படுத்துங்கள்.உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடி தான் என்னுடைய திறனை நான் வளர்த்துக் கொண்டேன். இங்கு தான் உங்களால் வளர முடியும்.

150 கிமீ வேகம்

150 கிமீ வேகம்

இங்கு உங்களை யாரும் பார்க்க மாட்டார்கள். அதனால் தைரியமாக விளையாடுங்கள். இதேபோன்று ஆர்ஸ்திப் சிங் அதிவேகமாக பந்து வீச வேண்டும் என நினைக்க வேண்டாம். உங்களுக்கு எந்த வேகம் பொருந்துமோ அந்த வேகத்தை தொடர்ந்து கவனம் செலுத்துங்கள். எப்போயாவது 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசலாம். அதேபோல் எப்போதும் தொடர்ந்து குறைந்த வேகத்தில் பந்து வீசும் பழக்கத்தையும் வைத்துக் கொள்ளாதீர்கள். வேகப்பந்துவீச்சாளர்கள் எப்போதும் 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு அனைத்து பந்தையும் வீசவேண்டும் என நினைக்கிறார்கள். அப்படி செய்யும் போது உங்களால் சரியான லைன் மற்றும் லெங்தில் வீச முடியாது.

வேகம் முக்கியமல்ல

வேகம் முக்கியமல்ல

வேகமாக வீச வேண்டும் என்ற கவனம் மட்டுமே இருக்கும் தவிர பந்தை எப்படி பிடிக்க வேண்டும், எங்கு வீசவேண்டும் என்பதை எல்லாம் நீங்கள் கவனம் செலுத்த தவறிவிடுவீர்கள். இதனால் உங்களுடைய சிறந்த வேகம் எது என்று கண்டுபிடித்து, அதில் பந்தை எப்படி வீச வேண்டும் உள்ளிட்ட மற்ற விஷயங்களை எல்லாம் கற்றுக் கொள்ளுங்கள். இது எடுத்தவுடன் நிச்சயம் வராது. பயிற்சியின் மூலம் மட்டும் தான் வரும். அதிவேகமாக வீசுவதை விட சரியான லைன் மற்றும் லெங்தில் எப்போதாவது கொஞ்சம் வேகத்தை அதிகப்படுத்தி வீசினால் நிச்சயம் உங்களால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் இது என்னுடைய அறிவுரை ஆகும் என்று பிரட்லீ கூறியுள்ளார்.இந்திய வீரர்கள் பற்றி பிரட்லீ அடிக்கடி பேசுவதால், அவர் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்புக்கு வர விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Story first published: Sunday, November 27, 2022, 22:33 [IST]
Other articles published on Nov 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+