ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னே உயிரிழப்பு.. மர்மமான முறையில் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
தாய்லாந்து: ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே காலமானார் என்ற செய்தி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஜாம்பவானாக விளங்கியவர் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே.
ஓய்வுக்கு பிறகு கிரிக்கெட் போட்டிகளுக்கு கமெண்ட்டேட்டரி பணிகளை செய்து வந்தார்.

அதிர்ச்சி செய்தி
இந்நிலையில் இன்று மாலை அவர் மர்மமான முறையில் உயிரிழந்துவிட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 52 மட்டுமே. ஷேன் வார்னே தனது தனிப்பட்ட பணிகளுக்காக தாய்லாந்தில் உள்ள கோசாமூய் ( koh samui) என்ற இடத்திற்கு சென்றுள்ளார். இன்று மாலை அவர் தங்கியிருந்த விடுதியில் அவர் எந்தவித பேச்சு மூச்சும் இன்றி கிடந்துள்ளார்.

உயிரிழப்பு
உடனடியாக மருத்துவர்கள் வந்து பரிசோதனை செய்து பார்த்த போது, அவரின் உயிர் பிரிந்தது தெரியவந்துள்ளது. திடீர் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும், உதவிக்கு யாரும் இல்லாததால் உயிரிழந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்பில் மர்மம்
ஆஸ்திரேலியாவில் இருக்க வேண்டியவர், எதற்காக திடீரென தாய்வான் செல்ல வேண்டும். முழு ஆரோக்கியத்துடன் இருந்தவருக்கு எப்படி திடீரென மாரடைப்பு ஏற்பட்டது என்பது மர்மமாகவே இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாதனைகள்
இதுவரை 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷேன் வார்னே 708 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். 191 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 293 விக்கெட்களை கைப்பற்றியவர். ஐபிஎல் தொடரிலும் வார்னே விளையாடியுள்ளார். 55 போட்டிகளில் ஆடி 57 விக்கெட்களை எடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications