Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

22 வயதில் 452 ரன்கள் குவித்த டான் பிராட்மேன்.. உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த இன்னிங்ஸ்..

சிட்னி: 95 வருடங்களுக்கு முன்பு இளம் வீரர் இரண்டாவது இன்னிங்சில் சதம் எடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஒரு சதம் அல்ல. மொத்தம் 400 ரன்களுக்கும் மேல்.அவரது அந்த மேட்ச் ஆட்டம் அவர் கப்பலில் ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கிலாந்து பயணம் செய்ய வழி வகுத்தது.

அந்த வீரர் தான் டான் பிராட்மேன்.அந்த ஷேஃபீல்ட் ஷில்ட்
மேட்ச் 1930, ஜனவரி மாதம். சிட்னி மைதானத்தில் நடைபெற்றது.
நியூசவுத் வேல்ஸ் அணியின் துவக்க வீரராக களம் இறங்கிய
பிராட்மேன் சொல்லிக் கொள்கிற மாதிரி பெரியதாக ஒன்றும் செய்யவில்லை.
எடுத்தது 3 ரன்கள் மட்டும் தான்.

don bradman india vs england virat kohli

நியூசவுத் வேல்ஸ் அணியின் ஸ்கோர் 235 . 56, 41, 40 ரன்கள் மூன்று வீரர்கள் எடுத்தனர். இரண்டு வீரர்கள் 15 மற்றும் இரண்டு வீரர்கள் தலா 6 ரன்கள் எடுத்தனர்.எதிரணி குவீன்ஸ்லாந்து ஸ்கோர் 227.இரண்டாவது இன்னிங்சில் முதல் விக்கெட் விழுந்ததும் மைதானத்திற்குள் வந்தார் பிராட்மேன் பேட்டிங் ஆட.

வந்ததிலிருந்து தொடர்ந்து ஆடிக் கொண்டே இருந்தார், அவர் அணி கேப்டன் அலன் கிப்பாஸ் ஆட்டத்தை டிக்ளர் செய்து முடிவுக்கு கொண்டு வரும் வரை.
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் அவர் அணி ஸ்கோர் 368/ 3.
பிராட்மேன் 205*

மூன்றாம் நாள் ஓய்வு தினம். அடுத்த நாள் இவரது அணி ஸ்கோர் 761 /8
பிராட்மேன் 452*அன்றைய தினத்தில் முடிவு ஸ்கோர் எதிரணி குவீன்ஸ்லாந்து 72/7. கடைசி தினத்தில் வெகு விரைவில் எதிரணி குவீன்ஸ்லாந்து ஆல் அவுட். 84 ரன்கள்.

டான் பிராட்மேன் அணி மகத்தான வெற்றி பதிவு செய்தது, 685 ரன்கள் வித்தியாசத்தில் வென்று.ஆட்டத்தின் ஹீரோவான டான் பிராட்மேனின் அப்பொழுது வயது 22.இந்த அதிக பட்ச 452 ரன்களை அவர் குவிக்க எதிர் கொண்ட பந்துக்கள் 465 மட்டுமே.

கட்டுப்பாடுடன் ஆடக் கூடியவர் இவர் என்பதை அன்றே நிரூபித்தார்.
அதிரடி ஆட்டம் அல்லாமல் அமைதியான முறையில் கவனம் செலுத்தி கிரிக்கெட் விளையாட்டில் அந்த கால கட்டத்தில் இருந்த எல்லா வகை ஷாட்டுகளையும் ஆடி அசத்தினார்

இத்தகைய அதிக ரன்களில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை
மாறாக பந்துகளை 49 முறை பவுண்டரி எல்லைக் கோட்டை கடக்க வைத்தார்.

அன்றைய கால கட்டத்தில் முதல் தர கிரிக்கெட் ஆட்டத்தில் அதிக ரன்கள் ஆன 437 எடுத்திருந்த விக்டோரியா அணியின் பில் பான்ஸ்போர்ட் ரன்கள் ரெக்கார்டை தகர்த்தெறிந்தார்.பிராட்மேன் இந்த 452* ரன்கள் உலக ரெக்கார்டாக திகழ ஆரம்பித்தது.

பாகிஸ்தானின் ஹனிப் முகமது 499, மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் பிரைன் லாரா 501* இந்த ப்ராட்மன் அதிக ரன்கள விட அதிகம் எடுத்த வீரர்கள்.
115 ரன்கள் எடுத்த அணி கேப்டன் அலன் கிப்பாஸ் உடன் ஜோடி சேர்ந்து அணிக்கு சேர்த்த ரன்கள் 305. 156, 180 ரன்கள் வேறு இரு வீரர்களுடன்
சேர்ந்து எடுக்க காரணமாக திகழ்ந்தார் டான் ப்ராட்மன்.

இந்த மேட்ச்சில் தனது நேர்த்தியான ஆட்டத்தை இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் ஆடும் பொழுது காட்டினார். அனாவசியமாக தூக்கி அடிக்காமல் தரையோடு ஆடி காண கூடியிருந்த ரசிகர்களை பரவசப் படுத்தினார்.

அவர் நான்கு சதங்களை அடிக்க எடுத்துக் கொண்ட நேரத்தின் விவரம் அந்த கால கட்டத்தில் புதுமையான ஒன்று.

100 ரன்கள்
104 நிமிடங்கள்

200 ரன்கள்
185 நிமிடங்கள்

300 ரன்கள்
288 நிமிடங்கள்

400 ரன்கள்
377 நிமிடங்கள்

பேட்டிங் ஆட்டம் விறு விறுப்பாக செல்ல உதவியவர் டான் பிராட்மேன்.
அப்பொழுது அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்து இரண்டு வருடங்களில் 4 டெஸ்டுகள் ஆடி இரண்டு சதங்கள் எடுத்து இருந்தார்.
டெஸ்ட் சரித்திரத்தில் டான் பிராட்மேன் 52 டெஸ்ட்டுகள் மட்டுமே ஆடி யாராலும் நெருங்க முடியாத 99.94 சராசரி ரன்களுக்கு சொந்தக்காரர் ஆகி தனி முத்திரை பதித்து அசத்தியுள்ளார்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Sunday, February 9, 2025, 16:02 [IST]
Other articles published on Feb 9, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+