For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

48 ஆண்டுகளில் முதல் முறை.. தொடர் தோல்வியால் தவிக்கும் ஆஸ்திரேலியா.. தென்னாப்பிரிக்கா அபாரம்

லக்னோ : ஐசிசி உலக கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி இருப்பது இதுவே முதல் முறையாகும். லக்னோவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் பெவுமா 35 ரன்களும் வண்டர் டூஷன் 26 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். எய்டன் மார்க்கிரம் அபாரமாக விளையாடி 44 பந்துகளில் 56 ரன்கள் எடுக்க தனது கடைசி தொடரில் விளையாடி வரும் குயிண்டன் டி காக் சதம் விளாசி அசத்தினார்.109 ரன்கள் எடுத்த அவர் 8 பவுண்டரிகளையும் 5 சிக்சர்களையும் அடித்தார்.

Australia lose 4th consecutive match in icc world cup history

இறுதியில் மார்க்கோ யான்சன் 26 ரன்கள் சேர்க்க தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. அதிரடி வீரன் மிச்சல் மார்ஸ் 7 ரன்கள், டேவிட் வார்னர் 13 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினார்.

ஸ்மித் 19 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினர். இதேபோன்று ஜாஸ் இங்கிலீஷ் 5 ரன்களிலும் அதிரடி வீரர் மேக்ஸ்வெல் 3 ரன்களிலும் மார்க்கஸ் ஸ்டோனிஸ் ஐந்து ரன்களிலும் வரிசையாக பெவிலியன் நோக்கி அணிவகுப்பு நடத்தினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 70 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து மார்னஸ் லாபஸ்சேன் பொறுப்பாக விளையாடி 74 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து பெர்லின் திரும்பினார்.

இறுதியில் ஸ்டாக் 27 ரன்களும் கேப்டன் பேட் கம்மின்ஸ் 22 ரன்களும் சேர்க்க ஆஸ்திரேலியா அணி 40.5 ஓவர்களில் எல்லாம் 177 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் ரபாடா மூன்று விக்கெட்டுகளையும் மார்கோ யான்சன், கேசவ் மகராஜ் ,ஷாம்சி ஆகியோர் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

ஆஸ்திரேலிய அணி உலக கோப்பை வரலாற்றில் தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவியிருப்பது இதுவே முதல் முறையாகும். 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக தோல்வியை தழுவிய ஆஸ்திரேலிய அணி, 2023 தொடக்கத்தில் தற்போது இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் தோல்வியை தழுவி நான்கு போட்டிகளில் தோற்று இருக்கிறது.

Story first published: Thursday, October 12, 2023, 21:57 [IST]
Other articles published on Oct 12, 2023
English summary
Australia lose 4th consecutive match in icc world cup history 48 ஆண்டுகளில் முதல் முறை.. தொடர் தோல்வியால் தவிக்கும் ஆஸ்திரேலியா.. தென்னாப்பிரிக்கா அபாரம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+