Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடித்து வெளுத்த ஜடேஜா.. அடுத்தடுத்து விக்கெட்டை இழந்த ஆஸி. பேட்ஸ்மேன்கள்.. மையம் கொண்ட ஸ்மித் புயல்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக பவுலிங் செய்ய தொடங்கி உள்ளது. இரண்டாம் நாள் ஆட்டம் இதனால் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று முதல்நாள் ஆட்டத்தில் மழை காரணமாக ஆட்டம் மூன்று முறை தடைபட்டது.

இதையடுத்து இன்று மழை காரணமாக இன்றைய ஆட்டம் அரை மணி நேரம் முன்பாகவே தொடங்கிவிட்டது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டிற்கு 166 ரன்கள் எடுத்தது. மார்னஸ், புக்கோவஸ்கி இருவரும் இதில் அரைசதம் அடித்தனர்.

 நேற்று மோசம்

நேற்று மோசம்

நேற்று இந்திய அணியின் பவுலிங் அத்தனை சிறப்பாக இல்லை. அதேபோல் இந்திய அணியின் பீல்டிங்கும் சிறப்பாக இல்லை. இந்த நிலையில் நேற்று ஆட்ட முடியில் மார்னஸ் மற்றும் ஸ்மித் இருவரும் களத்தில் இருந்தனர்.

 இன்று அதிரடி

இன்று அதிரடி

இந்த நிலையில் இன்றும் மார்னஸ் அதிரடியாக ஆடி வந்தார். ஆனால் 91 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்னஸ் ஜடேஜா பவுலிங்கில் அவுட்டானார்.அதன்பின் இறங்கிய மேத்யூ வேட் 13, கேமரூன் கிரீன் 0 ரன்களுக்கு அவுட்டானார்கள்.

சிறப்பு

சிறப்பு

இன்று சிறப்பாக பவுலிங் செய்த ஜடேஜா 2 விக்கெட்டுகளை எடுத்தார். ஆனால் இன்னொரு பக்கம் ஸ்மித் உறுதியாக மைதானத்தில் ஆடி வருகிறார். 76 ரன்கள் எடுத்துள்ள ஸ்மித் களத்தில் உறுதியாக ஆடி வருகிறார். இதன் மூலம் ஸ்மித் பல நாட்களுக்கு பின் மீண்டும் பார்மிற்கு திரும்பி உள்ளார்.

இரண்டாம் நாள்

இரண்டாம் நாள்

இந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டை இழந்து 249 ரன்கள் எடுத்துள்ளது. இன்று பெரிய அளவில் மழை பெய்யவில்லை . பிட்ச் பவுலிங் செய்ய சாதகமாக இருப்பதால், ஆஸ்திரேலியா விரைவில் ஆல் அவுட் ஆக வாய்ப்புள்ளது.

Story first published: Friday, January 8, 2021, 7:22 [IST]
Other articles published on Jan 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+