For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கோப்பை டி20: ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

By Veera Kumar

கான்பெரா: உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாகவும், வார்னர் துணை கேப்டனாகவும் செயல்பட உள்ளனர்.

மார்ச் 8ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதிவரை, உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணி சில தினங்கள் முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று ஆஸ்திரேலிய அணி விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Australia name squad for World T20; Steve Smith appointed captain

ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர் (துணை கேப்டன்), அஸ்டன் அகர், நாதன் கல்டர்-நைல், ஜேம்ஸ் பால்க்னர், ஆரோன் பின்ச், ஜான் ஹேஸ்டிங்ஸ், ஜோஷ் ஹசில்வுட், உஸ்மான் கவஜா, மிட்சேல் மார்ஷ், கிளன் மேக்ஸ்வெல், பீட்டர் நெவில் (விக்கெட் கீப்பர்), ஆன்ட்ரு டை, ஷேன் வாட்சன், ஆடம் ஜம்பா. இவர்கள்தான் அணியிலுள்ள 15 வீரர்கள்.

பிக் பாஷ் எனப்படும் ஆஸி. உள்நாட்டு டி20 தொடரில் சிறப்பாக ஆடிய உஸ்மான் கவஜாவுக்கு அணியில் இடம் கிடைத்துள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பர் இல்லாமல் ஆஸி. அவஸ்தை பட்டதை நினைத்து பார்த்து, பீட்டர் நெவில் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார்.

Story first published: Tuesday, February 9, 2016, 12:28 [IST]
Other articles published on Feb 9, 2016
English summary
After a 0-3 whitewash against India, Australia have made major changes to their side for the next month's ICC World Twenty20.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+