For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 நாள் எடுத்துக்கோங்க.. முடிஞ்சா 412 ரன்ன அடிங்க.. ஆஸி.க்கு இங்கிலாந்து சவால்! பரபரப்பில் ஆஷஸ்!

By Veera Kumar

லண்டன்: இங்கிலாந்து-ஆஸ்திரேலியா நடுவேயான ஆஷஸ் டெஸ்ட் போட்டி பரபரப்பான முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. ஆட்டத்தில் இன்னும் இரு நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு 412 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. 2 நாட்கள் எஞ்சியுள்ள வாய்ப்பை பயன்படுத்தி, ஆஸ்திரேலியா இந்த ரன்களை எடுக்குமா, அல்லது இங்கிலாந்து பவுலர்கள் ஆஸ்திரேலியாவை ஆல்-அவுட் செய்வார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

430 ரன்கள் குவிப்பு

430 ரன்கள் குவிப்பு

இங்கிலாந்து- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் ஆஷஸ் போட்டி புதன்கிழமை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 430 ரன்கள் குவித்தது. ஜோரூட் 134 ரன்கள் விளாசியது இதற்கு முக்கிய காரணம்.

ஆஸ்திரேலியா தடுமாற்றம்

ஆஸ்திரேலியா தடுமாற்றம்

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 2வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று நடைபெற்ற 3வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, 308 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியின் ரோஜர்ஸ் அதிகபட்சமாக 95 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், பிராட், உட், மொயீன் அலி தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

இங்கிலாந்து அதிரடி

இங்கிலாந்து அதிரடி

2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சை ஒப்பிட்டால் சற்று அதிரடியை காண்பித்தே விளையாடியது. விரைவிலேயே முடிந்த அளவுக்கு ரன்களை குவித்து, ஆஸ்திரேலியாவை பேட்டிங்கிற்கு அழைக்க வேண்டும். ஆட்டம் டிரா ஆகிவிடக்கூடாது என்பதில் இங்கிலாந்து குறியாக இருந்தது. அதிரடி காரணமாக, குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்களையும் இழந்தப்படியே இருந்தது இங்கிலாந்து. ஆனால், அது தொடர் சரிவாக மாறி இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் மாறவில்லை.

412 இலக்கு

412 இலக்கு

ஜோ ரூட்டும், இயன் பெல்லும் சிறப்பாக ஆடி தலா 60 ரன்கள் எடுத்தனர். இறுதியில் அந்த அணி 289 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில், சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியான் 4 விக்கெட்களை விழ்த்தினார்.

முதல் இன்னிங்ஸ் ரன்களையும் சேர்த்து ஆஸ்திரேலியாவிற்கு 412 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயத்துள்ளது இங்கிலாந்து. இந்த ஸ்கோர் இரு அணிகளுக்குமே சவாலான ஒன்றாகும். இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் எஞ்சியுள்ளதால், ஆஸ்திரேலியா, மிக பொறுமையாக இந்த ஸ்கோரை தொட முயலும். இது இங்கிலாந்துக்கு நெருக்கடியை கொடுக்கும்.

பரபரப்பு

பரபரப்பு

ஆனால், 4வது இன்னிங்சில் ஒரு அணி 400 ரன்களை விரட்டி பிடிப்பது மிகவும் அரிது. 2003ல், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 418 ரன்களை விரட்டி பிடித்து வெஸ்ட் இண்டீஸ் வென்றதே இதுவரை சாதனை. இருப்பினும் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசை பலமாக இருப்பது, பிட்ச் இன்னும் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருப்பது போன்ற அம்சங்கள் ஆஸ்திரேலியாவுக்கு சாதகம். அதேநேரம், ஆண்டர்சன், பிராட் போன்ற பவுலர்கள் முதல் இன்னிங்சை போலவே சிறந்த பவுலிங் பங்களிப்பை செய்தால், இங்கிலாந்து கடந்த ஆஷஸ் தொடரின் தொடர் தோல்விக்கு பழி வாங்கிவிடும்.

Story first published: Saturday, July 11, 2015, 12:22 [IST]
Other articles published on Jul 11, 2015
English summary
Aussies need 412 to win in the 1st Test of Ashes in Cardiff. The test comes in the important juncture.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+