Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன்.. நாளைய முக்கிய அறிவிப்பு..முன்னிலையில் இருப்பது யார்?

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் நியமிப்பது குறித்து நாளை முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

ஏற்கனவே கேப்டனாக இருந்த ஆரோன் பிஞ்ச், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், அடுத்த கேப்டன் நியமிக்கப்பட இருக்கிறார்.

2023ஆம் ஆண்டு ஒருநாள் தொடருக்கான உலக கோப்பை நடைபெறுவதால், அதற்கு ஏற்ற வீரரை தேர்வு செய்ய ஆஸ்திரேலிய கரிக்கெட் வாரியம் முடிவு எடுத்துள்ளது.

அடுத்த கேப்டன்

அடுத்த கேப்டன்

அடுத்த கேப்டனாக இருக்கும் பட்டியலில் முதன்மையில் இருப்பவர் டேவிட் வார்னரும், ஸ்மித்தும் தான். காரணம், ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனுபவம் உள்ள வார்னர், சன்ரைசர்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்திருக்கிறார். இதனால் வார்னர் தான் சரியான தேர்வாக இருப்பார் என அனைவரும் நம்புகின்றனர். ஆனால், அதில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

சிக்கல்

சிக்கல்

Sand paper விவகாரத்தில் டேவிட் வார்னர் சிக்கியதால் அவர் கேப்டனாக செயல்பட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வாழ்நாள் தடை விதித்துள்ளது. ஆனால், இதே போன்ற தடை ஸ்மித்துக்கு விதிக்கப்பட்ட நிலையில், அவர் மீண்டும் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் நாளை நடைபெறும் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் வார்னர் மீதான தடையை விலக்கி, அவர் கேப்டனாக செயல்பட நியமிக்கப்படுவார் என தெரிகிறது.

சமாளிக்க முடிவு

சமாளிக்க முடிவு

டேவிட் வார்னர், மற்ற நாடுகளில் நடக்கும் டி20 தொடரில் விளையாட ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், அவரை சமாளிக்க, கேப்டன் பொறுப்பை வழங்கி சமதானப்படுத்தும் முயற்சியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இறங்கியுள்ளது. இதே போன்று இந்த 2 நாள் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

மற்ற விவகாரம்

மற்ற விவகாரம்

தொலைக்காட்சிக்கான உரிமை ஒப்பந்தம், வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்தம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. ஆஸ்திரேலியாவின் அடுத்த கேப்டன் வார்னர் அல்லது ஸ்மித்தா என்ற கடும் போட்டி நிலவுகிறது.

Story first published: Wednesday, October 12, 2022, 15:19 [IST]
Other articles published on Oct 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+