Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்த ஆண்டு முதலாவது பகல் இரவு 'டெஸ்ட்' போட்டி.. ஆஸி, நியூசி. மோதல்!

மெல்போர்ன்: கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக டெஸ்ட் போட்டி ஒன்றை பகல் இரவுப் போட்டியாக நடத்தவுள்ளனர். அடுத்த ஆண்டு இப்போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் மோதும் என்று தெரிகிறது.

இதுதொடர்பான திட்ட ஆலோசனைகளில் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இறங்கியுள்ளன.

இந்தப் போட்டியில் இளஞ்சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.

வரலாற்றிலேயே முதல் முறையாக

வரலாற்றிலேயே முதல் முறையாக

கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை டெஸ்ட் போட்டி எதுவும் பகல் இரவுப் போட்டியாக நடந்ததில்லை. எனவே இந்தப் போட்டி வரலாற்றில் இடம் பிடிக்கும்.

2015-16ல்

2015-16ல்

2015-16 சீசனில் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் மோதத் திட்டமிட்டுள்ளன.

மெல்போர்னில் ஆலோசனை

மெல்போர்னில் ஆலோசனை

இதுதொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜேம்ஸ் சுதர்லான்ட் மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய தலைமை செயலதிகாரி டேவிட் ஒயிட் ஆகியோர் மெல்போர்ன் நகரில் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

2015 நவம்பரில்

2015 நவம்பரில்

2015ம் ஆண்டு நவம்பர் மாதம் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய வரும்போது இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பகல் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளன.

எங்கு மோதல்

எங்கு மோதல்

எந்த இடத்தில் போட்டியை நடத்துவது என்பது மட்டும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

ஐசிசி அனுமதி

ஐசிசி அனுமதி

பகல் இரவு டெஸ்ட் போட்டியை உறுப்பு நாடுகள் நடத்துவதற்கு ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி அளித்து விட்டதைத் தொடர்ந்து முதல் முறையாக இப்போட்டியை ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் ஏற்பாடு செய்யவுள்ளன.

ஏற்கனவே

ஏற்கனவே

ஏற்கனவே ஒரு நாள் போட்டிகள் பகல் இரவுப் போட்டிகளாக பல காலமாக நடத்தப்பட்டு வருகின்றன. டுவென்டி 20 போட்டிகள் பெரும்பாலும் இரவுப் போட்டிகளாகவே நடத்தப்படுகின்றன என்பது நினைவிருக்கலாம்.

Story first published: Monday, June 30, 2014, 14:26 [IST]
Other articles published on Jun 30, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+