For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பந்து சேத விவகாரத்தின் விளைவு.. பாக். தொடரில் 5 அறிமுக வீரர்களோடு வரும் ஆஸி. அணி

பிரிஸ்பேன் : பாகிஸ்தானுக்கு எதிரான ஆஸ்திரேலியா தொடருக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா அணியில் 5 அறிமுக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஸ்மித்,வார்னர் மற்றும் பேன்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு ஆண்டு தடையில் இருப்பதால் ஆஸ்திரேலியா அணி பெரும் பின்னடைவுகளை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதன் விளைவாகவே தற்போது அந்த அணியில் 5 இளம் வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

Australia picks 5 new players for pakistan test after ball tampering era

முதலாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 7ஆம் தேதி துபாயில் தொடங்க இருக்கிறது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா அணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பீட்டர் சிடில் இடம்பெற்றுள்ளார். ஆரோன் பின்ச் மீண்டும் ஆஸ்திரேலியா அணியில் இடம்பெற்றுள்ளார். அதிரடி ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பெறவில்லை.

இதுகுறித்து ஆஸ்திரேலியா அணியின் தேர்வாளர் ட்ரெவர் ஹோர்ன்ஸ் கூறுகையில்,முன்னணி வீரர்கள் இல்லாத காரணத்தினால் அணியில் பல முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த அணி பாகிஸ்தான் தொடரில் அந்த அணிக்கு கடுமையான சவாலை அளிக்கக்கூடிய அணியாகவே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அணியில் அறிவிக்கப்பட்டுள்ள பெரும்பாலான வீரர்கள் இந்திய ஏ அணிக்கெதிரான போட்டிகளில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி :

டிம் பெயின்,அஸ்டோன் அகர்,ப்ரெண்டன் டோஃகேட்,ஆரோன் பின்ச்,டிராவிஸ் ஹெட்,ஜான் ஹொலண்ட்,உஸ்மான் கவாஜா,மரன்ஸ் லபுஸ்சகனே,நாதன் லயன்,மிட்செல் மார்ஷ்,ஷான் மார்ஷ்,மிச்செல் நேசர்,மாட் ரென்ஷா,பீட்டர் சிடில் மற்றும் மிட்சேல் ஸ்டார்க்

Story first published: Thursday, September 13, 2018, 12:11 [IST]
Other articles published on Sep 13, 2018
English summary
Australia picks 5 new players for pakistan test after ball tampering era
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X