Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவை வீழ்த்த இந்திய வீரரே ஆயுதமாகிறார்.. ஆஸ்திரேலியா போட்ட மெகா ப்ளான்.. பாட்சா பலிக்குமா??

பெங்களூரு: இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக அஸ்திரேலிய ரகசிய திட்டத்தை போட்டுள்ளது. அதுவும் இந்தியாவை சேர்ந்த வீரர் தான் உதவப்போகிறார் என்றும் தெரியவந்துள்ளது.

நியூசிலாந்து தொடரை முடித்த கையுடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடவுள்ளது.

இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 9ம் தேதியன்று நாக்பூரில் உள்ள மைதானத்தில் தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

ஆஸி, டெஸ்ட் தொடர்

ஆஸி, டெஸ்ட் தொடர்

மிகவும் பலமான ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுடன் மோதிய கடைசி 3 டெஸ்ட் தொடர்களிலும் தோல்வியை மட்டுமே பெற்றுள்ளது. அதுவும் கடைசியாக கடந்த 2005ம் ஆண்டு தான் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியை வீழ்த்தியுள்ளது. இந்த ரெக்கார்ட்களை உடைத்தெறிவதற்காக தான் இந்த முறை பேட்ஸ் கம்மின்ஸ் தலைமையிலான அணி முனைப்பு காட்டி வருகின்றது.

மாஸ்டர் ப்ளான்

மாஸ்டர் ப்ளான்

இந்நிலையில் இதற்காக ரகசிய திட்டத்துடன் வந்துள்ளனர். அதாவது இன்று இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நேராக நாக்பூருக்கு செல்லாமல் பெங்களூரு மைதானத்தில் 5 நாட்கள் முகாமிட்டுள்ளனர். பயிற்சி போட்டிகளே எங்களுக்கு வேண்டாம் என கூறிவிட்ட அவர்கள், இந்தியாவை சேர்ந்த அபிஹ் முஷ்டாக் என்ற அட்டகாசமான ஸ்பின்னரை பயிற்சி முகாமிற்கு அழைத்துள்ளனர்.

என்ன காரணம்

என்ன காரணம்

அதாவது சுழற்பந்துவீச்சுக்கு சொர்க்கமாக உள்ள இந்தியாவில் அஸ்வின், ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் என 4 பெரும் வீரர்களை தாண்டி ஆஸ்திரேலியாவால் எதுவுமே செய்ய முடியாது. எனவே நாக்பூரில் இருப்பதை போன்றே பெங்களூருவில் பிட்ச்-ஐ ஏற்படுத்த கோரியுள்ளனர். அங்கு இந்திய ஸ்பின்னர்களை சமாளிப்பதற்கு, ஒரு இந்திய ஸ்பின்னரை வைத்தே பயிற்சி செய்யவுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் சுழல்

ஜம்மு காஷ்மீர் சுழல்

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அபித் முஷ்டாக், ரஞ்சிக்கோப்பை தொடரில் உச்சபட்ச ஃபார்மில் இருந்தவர். ரஞ்சிக்கோப்பையில் வெறும் 7 போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்களை அசால்ட்டாக கைப்பற்றினார். எனவே இவரை வைத்து இந்திய களத்தில் பயிற்சி செய்தால், நிச்சயம் இந்தியாவுக்கு சவால் கொடுக்கலாம் என்ற திட்டத்துடன் களமிறங்கியுள்ளனர்.

Story first published: Wednesday, February 1, 2023, 17:46 [IST]
Other articles published on Feb 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+