Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின், தோனியால் முடியாததை முடித்து காட்டிய அவர்..! கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை…!

Recommended Video

Ellyse Perry Record : சச்சின், தோனியால் முடியாததை முடித்து காட்டிய ஆஸ்திரேலியவின் பெர்ரி- வீடியோ

கேன்பரா: கிரிக்கெட் வீரர்களால் நிகழ்த்த முடியாத உலக சாதனையை ஆஸி. வீராங்கனை ஒருவர் நிகழ்த்தி உள்ளார்.

ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியை சேர்ந்தவர் எலீஸ் பெர்ரி. சர்வ தேச டி 20 கிரிக்கெட்டில் 1000 ரன்கள் அடித்து 100 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். சர்வதேச ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்த சாதனையை எலீஸ் படைத்துள்ளார்.

கடந்தாண்டு பெண்கள் டி 20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக ஆட்டத்தில் நடாலி ஸ்கிவரரின் விக்கெட்டை வீழ்த்தினார். அதன் மூலம், ஒட்டு மொத்த 20 ஓவர் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெயரை பெற்றார் எலீஸ் பெர்ரி.

சாதனை

சாதனை

தற்போது, அதே இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 2வது 20 ஓவர் போட்டியில் 39 பந்துகளில் 47 ரன்களை அடித்ததன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 1000 ரன்களையும் கடந்தவர் என்ற பெருமையை பெற்றார். இதன் மூலம், சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 1000 ரன்கள் அடித்து, 100 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

மிக்க மகிழ்ச்சி

மிக்க மகிழ்ச்சி

இதுகுறித்து எலிஸ் பெர்ரி கூறியதாவது: மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இதை எதிர்பார்க்கவில்லை. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் பெண்கள், ஆண்கள் ஆடும் அளவிற்கு போட்டிகள் விளையாடி வருகின்றனர்.

100 போட்டிகளில் பங்கேற்பு

100 போட்டிகளில் பங்கேற்பு

ஆகையால் நான் கிட்டத்தட்ட 100 போட்டிக்கும் மேல் விளையாடியுள்ளேன். இத்தனை போட்டிகள் விளையாடியதால் தான் இந்த சாதனையை படைக்க முடிந்தது என்றார்.

பாராட்டும், வாழ்த்தும்

பாராட்டும், வாழ்த்தும்

சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் எலீஸ் பெர்ரி இதுவரை 1005 ரன்கள் மற்றும் 103 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இவரின் இந்த சாதனையை பலரும் பாராட்டி, பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

Story first published: Monday, July 29, 2019, 15:45 [IST]
Other articles published on Jul 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+