Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தில் ஆஸ்திரேலியா!!

துபாய்: டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. அதேபோல் ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியலிலும் ஆஸ்திரேலியாவே முதலிடத்தில் இருக்கிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 20 ஓவர் போட்டி தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.

டெஸ்ட் போட்டி தர வரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும் முதலிடத்தில் இருந்த தென்னாப்பிரிக்கா 2வது இடத்திலும் இருக்கின்றன. இந்திய அணியோ 2 இடங்கள் இறங்கி 5வது இடத்துக்குப் போயுள்ளது.

Australia reclaim No. 1 Test rank; India slip to 5th

மீண்டும் முதலிடத்தில் ஆஸ்திரேலியா

1. ஆஸ்திரேலியா (123 புள்ளிகள்)

2. தென் ஆப்பிரிக்கா (123)

3. இங்கிலாந்து (104)

4. பாகிஸ்தான் (103)

5வது இடத்துக்கு இறங்கிய இந்தியா

5. இந்தியா (102)

6. நியூசிலாந்து (92)

7. இலங்கை (90)

9வது இடத்தில் ஜிம்பாப்வே

8. வெஸ்ட் இண்டீஸ் (76)

9. ஜிம்பாப்வே (40)

10. வங்காளதேசம் (21)

ஒருநாள் போட்டியிலும் ஆஸி..

ஒருநாள் போட்டி தர வரிசையிலும் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

2008-க்குப் பின்னர் முதல் முறையாக

ஒரே நேரத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தர வரிசையில் அந்த அணி முதலிடத்தை பிடிப்பது 2008-ம் ஆண்டு டிசம்பருக்கு பிறகு இதுவே முதல்முறை.

கிளார்க் பெருமிதம்

'டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் நம்பர் ஒன் அணியாக இருப்பது பெருமிதம் அளிக்கிறது. இது தான் எங்களது முக்கியமான இலக்காக இருந்தது' என்று ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.

ஒருநாள் தரவரிசையில் இந்தியா 2வது இடத்தில்

1. ஆஸ்திரேலியா (115 புள்ளி)

2. இந்தியா (112)

3. இலங்கை (111)

4. இங்கிலாந்து (110)

5. தென் ஆப்பிரிக்கா (109)

கடைசி 5 இடங்கள்

6. பாகிஸ்தான் (100)

7. நியூசிலாந்து (98)

8. வெஸ்ட் இண்டீஸ் (94)

9. வங்காளதேசம் (73)

10. ஜிம்பாப்வே (61)

Story first published: Friday, May 2, 2014, 12:29 [IST]
Other articles published on May 2, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+