Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொஞ்சமா ஹூக்கா புகைப்பார்.. கூட்டத்தில் கலந்துக்க மாட்டார்.. தோனி பற்றி கூறும் பெய்லி

சிட்னி : ஆஸ்திரேலிய வீரர் ஜார்ஜ் பெய்லி தோனி பற்றி சில அதிகம் அறியப்படாத தகவல்களை கூறியுள்ளார். தோனியுடன் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மற்றும் புனே அணிகளில் ஆடியுள்ளார் பெய்லி.

தோனி இளம் வீரர்களுக்கு எப்படி உதவுவார், எப்படி அவர்களை இறுக்கம் மற்றும் பதட்டம் இல்லாத மனநிலையில் வைத்திருப்பார் என்பது பற்றி தெரிவித்தார்.

இதில் ஷீஷா அல்லது ஹூக்கா போன்ற புகையிலையை தோனி அவ்வப்போது பயன்படுத்துவார் எனவும் கூறியுள்ளார். இது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும், ஆச்சரியமாகவும் உள்ளது. பெய்லி சொன்னது இதுதான் -

[தோனியால் என் பந்துவீச்சு வேற லெவலுக்கு சென்றது.. இளம் டெஸ்ட் வீரர் புகழாரம்]

அமைதியாக இருப்பார்

அமைதியாக இருப்பார்

தோனி எந்த சூழ்நிலையிலும் அமைதியாக இருப்பார். அது மட்டுமின்றி தன் அமைதியை அணியிலும் கொண்டு வந்து விடுவார். பெரிய குழப்பம் நடந்தாலும், பல சமயம் அவர் விக்கெட்டுக்கு பின்னே அமைதியாக நின்று இருப்பதை நாம் பல முறை பார்த்து இருக்கிறோம். அவர் பேட் வைத்துக் கொண்டு களத்தில் நின்றால் நிச்சயம் ஒரு திட்டம் வைத்திருப்பார்.

கொஞ்சம் ஹூக்கா

கொஞ்சம் ஹூக்கா

அவர் சிறிதளவு ஷீஷா அல்லது ஹூக்கா புகைக்க விரும்புவார். அதை தன் அறையில் புகைக்க ஏற்பாடுகள் செய்துவிடுவார். பெரும்பாலும், அது திறந்த அறையாக தான் இருக்கும். யார் வேண்டுமானாலும் செல்லலாம். பல இளம் வீரர்களை அங்கே நாம் காணலாம். இந்தியாவிலோ, மற்ற நாட்டு கிரிக்கெட் அணிகளிளோ, இது அனுபவ வீரர்கள் அடிப்படையில் தான் நடக்கும். ஆனால், தோனி அதை உடைத்து விடுவார்.

உள்ளுணர்வு வைத்து..

உள்ளுணர்வு வைத்து..

அதே போல, தோனி தன் உள்ளுணர்வுகளை வைத்து பந்துவீச்சாளர்களுக்கு யோசனை சொல்வார். அது சில சமயம் அவர்களை குழப்பத்தில் ஆழ்த்தி விடும். அவர்கள் என்ன திட்டம் வைத்து இருக்கிறார்களோ, அதற்கு மாறாக சொல்வார் தோனி.

நேர்மாறாக சொல்லும் தோனி

நேர்மாறாக சொல்லும் தோனி

பந்துவீச்சு திட்டம் பற்றிய கூட்டத்தில் ஒரு பேட்ஸ்மேனுக்கு எங்கே வீசுவது போன்ற திட்டம் தீட்டுவார்கள். தோனி பெரும்பாலும் இந்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டார். பந்துவீச்சாளர்கள் களத்திற்கு வந்த பின், தோனி சொல்வது நேர்மாறாக இருக்கிறது என குழம்பி விடுவார்கள். ஆனாலும், சில பந்துவீச்சாளர்கள் அவர் சொல்வதை அப்படியே செய்வார்கள். அந்த அளவிற்கு தான் பந்துவீச்சாளர்களை சரியாக வழி நடத்துகிறோம் என்ற நம்பிக்கை தோனியிடம் உள்ளது.

இப்படி கூறி இருக்கிறார் ஜார்ஜ் பெய்லி.. தல தலதான்..

Story first published: Monday, October 1, 2018, 17:57 [IST]
Other articles published on Oct 1, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+