Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் பேட்டிங்கை விரும்புவோம்... அதே நேரத்துல வெறுக்கவும் செய்வோம்... கலகல பெய்ன்

சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்கள் வரும் 27ம் தேதி முதல் துவங்கி நடைபெறவுள்ளன.

இதற்கென ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இந்திய வீரர்கள் குவாரன்டைன் மற்றும் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் விராட் கோலியின் ஆட்டத்தை விரும்பவும் அவர் அதிகமாக ரன்களை குவிக்கும்போது அதை வெறுக்கவும் செய்வதாக ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

குவாரன்டைனில் இந்திய வீரர்கள்

குவாரன்டைனில் இந்திய வீரர்கள்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் வரும் 27ம் தேதி முதல் துவங்கி ஜனவரி மாதம் வரை நடைபெறவுள்ளன. இதையொட்டி ஐபிஎல் 2020 சீசனை முடித்த கையுடன் ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு பயணம் மேற்கொண்ட இந்திய அணியினர் அங்கு குவாரன்டைனில் உள்ளனர்.

மீண்டும் வெல்லுமா இந்தியா?

மீண்டும் வெல்லுமா இந்தியா?

நேற்று முதல் அவர்கள் தங்களது பயிற்சிகளையும் துவக்கியுள்ளனர். கடந்த 2018ல் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை வென்றது. இது பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களை பெற்றது. இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்திய அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

கோலியின் ஆட்டத்தை விரும்புகிறார்கள்

கோலியின் ஆட்டத்தை விரும்புகிறார்கள்

இந்நிலையில் விராட் கோலியின் ஆட்டத்தை வெறுக்கவும் அதை விரும்பவும் ஆஸ்திரேலிய வீரர்கள் விரும்புவதாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார். ஏபிசி செய்திகளுக்காக பேசிய பெய்ன், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் கடுமையான போட்டி நிலவும் என்று கூறியுள்ளார்.

ஆசையின் விளைவு

ஆசையின் விளைவு

கடந்த தொடரின் டெஸ்ட் போட்டிகளின்போது விராட் கோலி மற்றும் பெய்ன் இருவரும் மைதானத்தில் வாக்குவாதங்களிலும் ஈடுபட்டனர். அந்த வாக்குவாதங்கள் இருவரும் கேப்டன்களாக இருப்பதால் மட்டும் நிகழவில்லை என்றும் இரண்டு சிறந்த வீரர்கள் விளையாடும்போது தங்களது அணி மேம்பட்டு இருக்க வேண்டும் என்ற ஆசையின் விளைவே அது என்றும் பெய்ன் மேலும் கூறினார்.

Story first published: Sunday, November 15, 2020, 18:51 [IST]
Other articles published on Nov 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+