Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WI vs AUS: வரலாற்றிலேயே முதல்முறையாக படுமோசமான ஸ்கோரை பதிவு செய்த ஆஸ்திரேலியா.. ஸ்கோர் என்ன?

பார்படோஸ்: வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 56.5 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இது வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த டெஸ்ட் இன்னிங்ஸ் ஸ்கோராகப் பதிவாகியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ஷமர் ஜோசப் ஆகியோரின் அபாரமான பந்துவீச்சு இந்தச் சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஜெய்டன் சீல்ஸ் 15.5 ஓவர்களில் 60 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, டெஸ்ட் போட்டிகளில் தனது மூன்றாவது 5 விக்கெட் சாதனையை பதிவு செய்தார்.

Australia s Lowest Test Score in West Indies Bowled Out for 180 in 1st Test

ஷமர் ஜோசப் 16 ஓவர்களில் 46 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா 128 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆமைவேக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டிராவிஸ் ஹெட் 78 பந்துகளில் 59 ரன்கள் குவித்து அணிக்கு ஆறுதல் அளித்தார்.

விக்கெட்டுகள் விரைவாக விழுந்த நிலையில், ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் அணியின் ஸ்கோரை உயர்த்த முடிவு செய்து, 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து சற்று அதிரடியாக விளையாடினார். இருப்பினும், வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலால் ஆஸ்திரேலிய அணி 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக பந்து வீசியதாக அனைவரும் பாராட்டிய நிலையில், முதல் நாள் ஆட்ட முடிவில் அவர்களின் முதல் இன்னிங்ஸ் பெரும் சரிவைச் சந்தித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 57 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பிராண்டன் கிங் 23 ரன்களுடனும், கேப்டன் ராஸ்டன் சேஸ் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். மிட்செல் ஸ்டார்க் தொடக்க வீரர்களான கிரெய்க் பிராத்வெய்ட் மற்றும் ஜான் கேம்ப்பெலை வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கு முன்னிலை அளித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியால் 150 ரன்களைக் கூட எட்ட முடியுமா? என்ற சந்தேகம் நிலவுகிறது. தற்போது ஆஸ்திரேலிய அணியே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் உள்ளது. முதல் நாள் ஆட்டத்தின் முடிவில், இந்தப் போட்டி பரபரப்பான திருப்பங்களுடன் முன்னேறி வருகிறது. இரு அணிகளின் பந்துவீச்சும் முதல் நாளில் முத்திரை பதித்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இந்தப் போட்டியின் திசையைத் தீர்மானிக்கும்.

Story first published: Thursday, June 26, 2025, 7:35 [IST]
Other articles published on Jun 26, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+