For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்ப விளையாட வேண்டாம்.. அப்புறம் பார்த்துக்கலாம்.. ஜிம்பாப்வேக்கு ஆஸி.. ஸாரி!

மெல்போர்ன்: கொரோனாவைரஸ் குழப்பம் காரணமாக ஜிம்பாப்வேவுடனான ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது.

கொரோனாவைரஸ் காரணமாக உலகெங்கும் விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா வெறியாட்டம் ஓயும்போது மீண்டும் போட்டிகளை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது.

Australias ODI series against Zimbabwe postponed

இந்நிலையில் தற்போது விளையாட்டு அமைப்புகள் போட்டிகளை நடத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன.

அந்த வகையில், ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு கடைசியில் நடத்தலாம் என்று ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. அதேபோல இங்கிலாந்து -பாகிஸ்தான் ஒரு தொடரில் சந்திக்கவுள்ளன. மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் இங்கிலாந்து சென்றுள்ளது. வரும் 8ம் தேதி இந்த தொடர் துவங்கவுள்ளது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணி, ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை ரத்து செய்துள்ளது. இதுதொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனாவைரஸ் காரணமாக இந்தத் தொடர் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.

இரு அணிகளும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதாக இருந்தன. ஆனால் தற்போது நிலைமை சரியாக இல்லாத காரணத்தால் இந்தத் தொடர் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, June 30, 2020, 19:23 [IST]
Other articles published on Jun 30, 2020
English summary
Australia's ODI series against Zimbabwe postponed due to the coronavirus pandemic
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+