மும்பை : ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பராக இருந்த பெர்ட் ஓல்ட்பில்ட் 54 டெஸ்டுகளில் 52 ஸ்டும்பிங்கள் செய்து சாதனை படைத்துள்ளார். இதில் லெக் ஸ்பின் பவுலர் கிளாறி கிரிம்மேட் பவுலிங்கில் மட்டும் செய்த ஸ்டும்பிங்கள் 28.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
1871ல் தான் முதன் முதலாக ஒரு ஓவருக்கு 6 பந்துக்கள் எண்ணிக்கை அறிமுகப் படுத்தப் பட்டது, விக்டோரியா, டாஸ்மானிய டீம்களுக்கான மேட்சில் ஆஸ்திரேலியாவில்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆஸ்திரேலிய அணியில் ஐயன் சப்பெல், கிரேக் சப்பெல் சகோதரர்கள் விளையாடினார்கள்.நியூசிலாந்து அணியில் ரிச்சர்ட் ஹாட்லீ, டாய்லே ஹாட்லீ சகோதரர்கள் விளையாடினார்கள்.இந்த டெஸ்டில் நியூசிலாந்து வீரர் க்ளேன் டர்னர் , இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் அடித்தார்.
101 , 110*
ரிச்சசர்ட் ஹாட்லீ 7 , டாய்லே ஹாட்லீ 5 விக்கெடுக்கள் எடுத்தனர்.
நியூசிலா ந் து அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் , இந்த கிரைஸ்ட் சர்ச் டெஸ்ட் மேட்சை வென்றது. வருடம் 1974.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
1877 முதல் அதிகாரபூர்வமான டெஸ்டில் முதல் பந்து வீசியவர் ஆல்பிரெட் ஷா, இங்கிலா ந்து வீரர். ஆஸ்திரலிய வீரர் பேனர்மன் முதல் பந்தை எதிர் கொண்டார். அந்த முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் தான் டெஸ்ட் சரித்திரத்தின் முதல் ரன் அடிக்கப் பட்டது. முதல் டெஸ்டிலே யே முதல் சதம் பதிவாயிற்று.
ஆஸ்திரேலிய டீம் முதல் டெஸ்டை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சரித்திரம் படைத்தது.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஸ்டம்பிங்களின் எண்ணிக்கை 1565.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பால் வில்சன் ஆஸ்திரேலிய வீரர். விளையாடியது ஒரே ஒரு டெஸ்ட். இந்திய டீமிற்கு எதிராக அன்றைய கல்கத்தா டெஸ்டில். 1998. இவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரன் எதுவும் எடுக்கவில்லை. பவுலிங்கிலும் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.
இந்திய பேட்டிங்கை துவக்கிய வி வி எஸ் லட்சுமண், நவ்ஜோத் சித்து இருவரும் சதங்கள் எடுக்க நெருங்கியும் அவுட் ஆகி விட்டனர். லட்சுமண் 95, சித்து 97.
இந்திய டீம் டெஸ்டை வென்றது.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சைமன் டேவிஸ் என்ற ஆஸ்திரேலிய வீரர் விளையாடிய ஒரே டெஸ்டின் ஒரே இன்னிங்சில் ரன் எதுவும் எடுக்கவில்லை.25 ஓவர்கள் பந்து வீசியும் ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை.நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது.
வெல்லிங்டன். 1986.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
1948 ஆம் ஆண்டு டான் ப்ராட்மன் தலைமையில் சுற்றுப் பயணம் சென்ற ஆஸ்திரேலிய அணி ஒரு மேட்சில் கூட தோல்வியை தழுவ வில்லை.
எஸ்ஸக்ஸ் ( Essex team ) அணிக்கு எதிரான மேட்ச் தனி முத்திரை பதித்தது.
ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. நான்கு வீரர்கள் சதம் எடுத்தனர்.
பில் பிரவுன் ( 153 ) டான் ப்ராட்மன் ( 187 ) சாம் லாக்ஸ்டன் ( 120 ) ரான் சகர்ஸ் ( 104* )
முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட்.
எஸ்ஸக்ஸ் அணி ஸ்கோர்
முதல் இன்னிங்ஸ் 83
இரண்டாவது இன்னிங்ஸ் 187
ஆஸ்திரேலிய பவுலர் ஐயன் ஜான்சன் ( 6 ) டோஷாக் ( 7 ) விக்கெடுக்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் 451 ரன்கள் வித்தியாசத்தில் மா பெரும் வெற்றி பெற்றது.இரண்டு நாட்களில் மேட்ச் முடிவடைந்தது.முதல் நாள் ( ஒரே நாளில் ) ஆஸ்திரேலிய அணி எடுத்த ரன்கள் 721.
வாசுதேவன் , பெங்களூரு